அரசியல் செய்தி

தமிழ்நாடு

17ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஸ்டாலின்

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக டில்லி செல்லும் ஸ்டாலின், வரும் 17ம் தேதி பிரதமரை சந்திக்க உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். உடனடியாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், பிரதமரை சந்திக்க செல்லவில்லை.தற்போது, கொரோனா நோய் பரவல் தினமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக டில்லி செல்லும் ஸ்டாலின், வரும் 17ம் தேதி பிரதமரை சந்திக்க உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.

உடனடியாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், பிரதமரை சந்திக்க செல்லவில்லை.தற்போது, கொரோனா நோய் பரவல் தினமும் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பிரதமரை சந்திப்பதற்காக, 16ம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்கிறார். இரவு அங்கு தங்குகிறார்.மறுநாள் காலை, 10:30 மணிக்கு, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

அப்போது, தமிழகத்தின் தேவைகள் தொடர்பாக 35 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.பிரதமர் உடனான சந்திப்பு முடிந்த பின், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.டில்லியில் கட்டப்படும் தி.மு.க., அலுவலகத்தை பார்வையிடவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூன்-202110:10:54 IST Report Abuse
RajanRajan மாய மோதிரத்தை தேய்த்து ஜகன் மோகினி படம் எல்லாம் காட்டி பாருங்க.தேறுதான்னு
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூன்-202101:35:33 IST Report Abuse
தமிழவேல் மோடிஜி அதெல்லாம் பார்ப்பாரா...🤔...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X