அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் 'கண்ணாமூச்சி!'

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறப்பட்டிருப்பதால், கண்டிப்பாக குறைக்கப்படும்,'' என, தி.மு.க.,வுக்கு எதிரான போராட்டம் என, 'கண்ணாமூச்சி' காட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார்.போராட்டம்பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வை கண்டித்து, அனைத்து
 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் 'கண்ணாமூச்சி!'

சென்னை:''தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறப்பட்டிருப்பதால், கண்டிப்பாக குறைக்கப்படும்,'' என, தி.மு.க.,வுக்கு எதிரான போராட்டம் என, 'கண்ணாமூச்சி' காட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார்.


போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வை கண்டித்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெட்ரோல் பங்க் முன், காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் தலைமை வகித்தார்.

தமிழக காங்., தலைவர் அழகிரி, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, சட்டசபை காங்., துணை தலைவர் ராஜேஷ்குமார், விஜய்வசந்த் எம்.பி., உள்ளிட்ட காங்கிரசார் பங்கேற்றனர். சென்னை முழுதும் மொத்தம், 142 இடங்களில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற அழகிரி அளித்த பேட்டி:தமிழகத்தில் புதிய அரசு ஆட்சி அமைத்து, 30 நாட்கள் தான் ஆகிறது. பச்சிளம் குழந்தையாக தான் இருக்கிறது.

கொரோனா தொற்று நிறைவு பெற்றதும், மற்ற வேலைகளை முதல்வர் ஸ்டாலின் துவக்குவார்.30 நாட்கள்தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறப்பட்டது. எனவே, கண்டிப்பாக விலை குறைக்கப்படும். பிரதமர் மோடிக்கு, ஏழு ஆண்டு காலம் கொடுத்தீர்கள்; ஸ்டாலினுக்கு, 30 நாட்கள் கூட நேரம் கொடுக்க மாட்டீர்களா?இவ்வாறு அவர் கூறினார்.


'ஆட்சி மாற்றம் வேண்டும்'

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, சென்னை, வேளச்சேரியில், இளைஞர் காங், தலைவரும், வேளச்சேரி எம்.எல்.ஏ.,வுமான ஹசன் மவுலானா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்போது, ஹசன் மவுலான கூறியதாவது:

காங்., ஆட்சி காலத்தில் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்தார்; விலை குறையவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும். எத்தனை போராட்டம் நடத்தினாலும், பா.ஜ., அரசு செவி சாய்க்காது.

தமிழகத்தில் கலால் வரியை குறைக்கும் போது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என, நிதியமைச்சர் தியாகராஜன் கூறி உள்ளார். வரும் 21ம் தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்திற்கு பின், முடிவுகள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். நீலாங்கரையில், காங்., - எம்.பி., விஜய் வசந்த; ஆதம்பாக்கத்தில், காங்., மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
12-ஜூன்-202110:56:33 IST Report Abuse
Rajarajan என்ன இது மொக்கையான போராட்டம் ?? இவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்றனர். அவர்களிடத்தில் உரிமையாக சொன்னால், ஒரே கையெழுத்தில் விஷயம் முடிந்து விடுமே ?? எதற்க்கு இந்த நாடகம். ஒரு கையெழுத்து போட, ஒரு நிமிடம் போதாதா ?? இலவச பேருந்து பயணம் முக்கியமா ?? அல்லது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு முக்கியமா ?? கையில் வெண்ணை இருக்கையில், நெய்க்கு அலைவானேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X