அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் பள்ளிகள் மூடல் எதிரொலி: குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
-ராமநாதபுரம் : கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள்திறக்கப்படாததால் ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில்குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 12ல் உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.உலகில் உள்ள குழந்தை தொழிலாளர்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருதல், அரசு, முதலாளிகள்,

-ராமநாதபுரம் : கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள்திறக்கப்படாததால் ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில்குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 12ல் உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.உலகில் உள்ள குழந்தை தொழிலாளர்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருதல், அரசு, முதலாளிகள், பணியாளர்கள், அமைப்புகளை ஒருங்கிணைத்து குழந்தைதொழிலாளர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்ட சைல்டு லைன் இயக்குனர்கருப்பசாமி கூறியதாவது: 2021 உலக குழந்தை தொழிலாளர்எதிர்ப்பு தினத்தை ஜ.நா., சபை ஆண்டு முழுவதும் குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு ஆண்டாக கடைப்பிடிக்கவலியுறுத்தியுள்ளது.

1986, 2016 குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,ஒழுங்குபடுத்தல் சட்டப்படி 14 வயதிற்குள் உள்ளவர்களைஎந்த விதமான பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 முதல் 18வயதிற்கு உட்பட்டவர்களை தீப்பெட்டி, பட்டாசு, கெமிக்கல், ஓட்டல்,பேக்கரி, ஒர்க்க்ஷாப் உள்ளிட்ட52 வகையான அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்த கூடாது.இதனை மீறிகுழந்தைகள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.மேலும் 2016 சட்டத்திருத்தத்தில்பெற்றோர், காப்பாளருக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை பெற்றுத்தரலாம்.
எங்களது சைல்டு லைன் 1098 க்கு வரும் புகார்களை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்கிறோம். அத்துறையினர்ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்களை மீட்டு சட்டப்படிநடவடிக்கை எடுக்கின்றனர்.குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு ஊரடங்கு காலக்கட்டத்தில் குழந்தை தொழில் முறை எதிர்ப்பு பிரசார அமைப்பு மூலம் ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில்கிராமங்களில் ஆய்வு செய்தோம். இதில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள்மூடப்பட்டுள்ளதால் பலர் தங்களது குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமலும், வறுமை காரணமாகவும் கட்டுமானப்பணி, ஓட்டல் ஆகிய வேலைகளுக்கு அனுப்பிவைப்பது 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை மாநில மனித உரிமை ஆணையம், குழந்தைகள் உரிமை ஆணையம், பள்ளி கல்விதுறை இயக்குனரிடம்கொடுத்துள்ளோம்.இதேபோல ஜ. நா., சபை நடத்திய ஆய்விலும்தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் 20ஆண்டுகளுக்கு முன்பு போல குழந்தை தொழிலாளர்கள்எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X