பொது செய்தி

தமிழ்நாடு

விடுமுறைக்கான சம்பளம் வேண்டும் : 'டான்டீ' தொழிலாளர்கள் கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கூடலுார்:'டான்டீ தொழிலாளர்களுக்கு, தொற்று பரிசோதனைக்காக வழங்கப்பட்ட, 3 நாள் விடுமுறைக்கான சம்பளத்தை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அரசு தேயிலை தோட்டத்திற்கு சொந்தமான டான்டீ தேயிலை தோட்டங்களில் பணிபுரியும், சிலருக்கு தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வசதியாக, கடந்த மாதம் மூன்று

கூடலுார்:'டான்டீ தொழிலாளர்களுக்கு, தொற்று பரிசோதனைக்காக வழங்கப்பட்ட, 3 நாள் விடுமுறைக்கான சம்பளத்தை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அரசு தேயிலை தோட்டத்திற்கு சொந்தமான டான்டீ தேயிலை தோட்டங்களில் பணிபுரியும், சிலருக்கு தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வசதியாக, கடந்த மாதம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. 'இதற்கான சம்பளம் வழங்கப்படும்' என, தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சம்பளம் வழங்கப்படவில்லை.தொழிலாளர்கள் கூறுகையில்,' எங்களுக்கு விடுமுறை விடப்பட்ட,மூன்று நாட்கள் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். மேலும், இம்மாதம், 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை, வழங்கிய விடுமுறைக்கான சம்பளத்தையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X