அரசியல் செய்தி

தமிழ்நாடு

சித்தா, ஆயுர்வேத சிகிச்சைக்கு ஒருங்கிணைப்பு மையம் துவக்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் 54 இடங்களில் அளிக்கப்படும் சித்த மருத்துவ சிகிச்சைக்கு, சென்னையில், ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை, அரும்பாக்கம், அரசு சித்தா மருத்துவனையில், சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். மருந்து தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்து, தயாரிக்கும்
 சித்தா, ஆயுர்வேத சிகிச்சைக்கு ஒருங்கிணைப்பு மையம் துவக்கம்

சென்னை:தமிழகத்தில் 54 இடங்களில் அளிக்கப்படும் சித்த மருத்துவ சிகிச்சைக்கு, சென்னையில், ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, அரும்பாக்கம், அரசு சித்தா மருத்துவனையில், சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். மருந்து தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்து, தயாரிக்கும் முறையை கேட்டறிந்தார்.


69 இடங்கள்

பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் ஒரு மாதத்தில் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையங்கள்; 11 யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையங்கள்; இரண்டு ஆயுர்வேத மையங்கள்; ஒரு யுனானி மையம்; ஒரு ஓமியோபதி சிகிச்சை மையம் என 69 இடங்களில் சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இங்கு 6,514 படுக்கைகள் தயாராக உள்ளன. இவற்றில், ஒரு மாதத்தில் 21 ஆயிரத்து, 286 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது திறக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் வாயிலாக, சித்த மருத்துவ சிகிச்சை, நோயின் தன்மை அறிந்து கொள்ள பயன்படும். இந்த கட்டளை மையத்தை 73587 23063 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எம்.பி.,யாக இருந்த வசந்தகுமார் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு, தொற்றுக்கு பிந்தைய சிகிச்சையில் உயிரிழந்தனர். புரளிஅவர்களுக்கு ஏன், அ.தி.மு.க., அரசு, கொரோனாவால் இறந்ததாக சான்றிதழ் வழங்கவில்லை?

தமிழக அரசு மீது முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், புரளியை கிளப்பி விடுகின்றனர். கொரோனா இறப்பு சான்றிதழ், ஐ.சி.எம்.ஆர்., வழிகாட்டுதல்படி வழங்கப்படுகிறது. இறப்பை குறைத்து காட்டவில்லை.கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க, மாற்றுத்திறனாளிகளை கட்டாயப்படுத்தவில்லை. அதுபோன்று தவறுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X