பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில்...கவனம் எங்கே? சோதனையில் 'கோட்டை'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் வரும் ரயில் பயணிகளிடம், உடல் வெப்ப நிலை பரிசோதனை கூட செய்யப்படாததால், தொற்று அபாயம் உள்ளது.ரயில் மூலம், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருவோர், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து திருப்பூர், கோவை வருவோரை கண்காணிப்பதில்லை. பயணியரிடம் ரயில் டிக்கெட் உள்ளதா என்பதை மட்டும் கேட்கும் அதிகாரிகள், உடல் வெப்ப நிலை பரிசோதனை கூட
  ரயில்வே ஸ்டேஷனில்...கவனம் எங்கே?  சோதனையில் 'கோட்டை'

திருப்பூர்:திருப்பூர் வரும் ரயில் பயணிகளிடம், உடல் வெப்ப நிலை பரிசோதனை கூட செய்யப்படாததால், தொற்று அபாயம் உள்ளது.ரயில் மூலம், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருவோர், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து திருப்பூர், கோவை வருவோரை கண்காணிப்பதில்லை. பயணியரிடம் ரயில் டிக்கெட் உள்ளதா என்பதை மட்டும் கேட்கும் அதிகாரிகள், உடல் வெப்ப நிலை பரிசோதனை கூட செய்வதில்லை.நேற்று மதியம், புதுடில்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில், திருப்பூருக்கு வந்தது. ரயிலிலிருந்து, 200 பேர் இறங்கி வந்தனர். இவர்களில் பெரும்பாலானோரை ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், போலீசார் பரிசோதிக்கவில்லை. ஒரு சிலரிடம் மட்டும் டிக்கெட் கேட்டனர்.ரயில் விட்டு இறங்குவோரை கண்காணிக்க, பரிசோதனைக்கென அமைக்கப்பட்டிருந்த மையம் செயல்பாடு இல்லாமல் மூடியே கிடக்கிறது. திருப்பூருக்கு ரயிலில் வரும் பயணியரில், காய்ச்சல், சளி உள்ளவர் விவரத்தை சேகரிக்க வேண்டியதும், தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X