தமிழ்நாடு

'அலை' தாக்காமல் ஓயட்டும்! அலட்சியத்திற்கு இடம் இல்லை: தற்காப்பால் எதிர்கொள்வோம்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் இரண்டாவது அலையால் ஏற்பட்டு வரும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலை உருவானால், எந்த பாதிப்பும் ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில், திருப்பூரில், தொற்று பாதிப்பு கடுமையானது. தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலையை
 'அலை' தாக்காமல் ஓயட்டும்! அலட்சியத்திற்கு இடம் இல்லை: தற்காப்பால் எதிர்கொள்வோம்

திருப்பூர்:திருப்பூரில் இரண்டாவது அலையால் ஏற்பட்டு வரும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலை உருவானால், எந்த பாதிப்பும் ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில், திருப்பூரில், தொற்று பாதிப்பு கடுமையானது.

தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான ஆயத்தத்திலும், மாவட்ட நிர்வாகம், தீவிரம் காட்ட வேண்டிய சூழல் இருக்கிறது.இரண்டாவது அலை கடுமையாக இருந்ததால், திருப்பூரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கட்டமைப்புகள் ஓரளவு வலுப்பெற்றிருக்கின்றன.
ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர் வசதிகள், சாதாரண படுக்கை வசதிகள் மேம்பாடு போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமங்கள்கூட, துவக்க கட்ட சிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டிருக்கின்றன.மூன்றாம் அலை வருமா?இரண்டாம் அலைக்கு பின், அமெரிக்காவில் நான்கு மாதங்களுக்கு பின்னும், இங்கிலாந்தில், எட்டு மாதங்களுக்கு பின்னும் மூன்றாவது அலை தாக்கியது.
மூன்றாம் அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்று கூறப்பட்டாலும், அதற்காக பயம் கொள்ள தேவையில்லை; ஆனால், அலட்சியம் கூடாது. குழந்தைகளுக்கான மருத்துவக்கட்டமைப்பு பெரியவர்களை போலன்றி, மாறுபட்டதாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.முதல் அலையில் முதியவர்கள், இரண்டாம் அலையில் இளையவர்கள் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலை சுகாதாரத்துறை பெரும் சவாலாக இருக்கும்.
நம் நாட்டில் மூன்றாவது அலை வருமா என்பதை கணிக்க முடியாவிட்டாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதில், மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.தடுப்பூசி, பெரும் தீர்வுபெற்றோருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டால், குழந்தைகளுக்கு கொரோனா பரவலை தடுத்துவிட முடியும்.திருப்பூரில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று, தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
'கோவேக்சின்' தடுப்பூசி. 18 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு செலுத்தி பரிசோதிக்க தொடங்கிஉள்ளனர்.குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு உருவாகலாம். இது தொற்று அச்சத்தை பெருமளவு போக்கிவிடும்.
இரண்டு அலைகளில் இருந்து மக்கள் கற்றுக்கொண்ட பாடம், விழிப்புணர்வு, மருத்துவக்கட்டமைப்பு மேம்பாடு, உரிய நேரத்தில் சிகிச்சை பெறுதல், தடுப்பூசிகள் போடுதல், தற்காப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுதல் போன்றவை, மூன்றாம் அலை ஏற்பட்டாலும், அதன் தாக்கத்தில் இருந்து, திருப்பூர் தப்பிக்க வாய்ப்பாக அமையும்.திருப்பூரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் படுக்கை, வென்டிலேட்டர் வசதிகள் ஆகிய கட்டமைப்புகள் ஓரளவு வலுப்பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X