பொது செய்தி

தமிழ்நாடு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (16+ 33)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில், சில தளர்வுகளுடன், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக, அமலில் உள்ள முழு ஊரடங்கு, நாளை மறுதினம் காலை, 6:00 மணிக்கு முடிவடைகிறது. அதனால், வரும் 21ம் தேதி காலை, 6:00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் அறிவித்துள்ளார்.அதன் விபரம்:* அனைத்து
 தளர்வுகள், ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை :தமிழகத்தில், சில தளர்வுகளுடன், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக, அமலில் உள்ள முழு ஊரடங்கு, நாளை மறுதினம் காலை, 6:00 மணிக்கு முடிவடைகிறது. அதனால், வரும் 21ம் தேதி காலை, 6:00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன் விபரம்:
* அனைத்து மாவட்டங்களிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.எனினும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், இந்த 11 மாவட்டங்களில், கூடுதலாக சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும், கட்டுப்பாடுகளுடன் நாளை மறுதினம் முதல் அனுமதி அளிக்கப்படுகிறது
*தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள், 'இ- - பதிவு'டன் அனுமதிக்கப்படும்
* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்வோர், சேவை கோருவோர் வீடுகளுக்கு சென்று, பழுது நீக்கம் செய்ய, காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, இ- - பதிவுடன் அனுமதிக்கப்படுவர். எனினும், இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதி இல்லை

*சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், காலை, 9:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை செயல்படும். விற்பனைக் கடைகள் செயல்படாது
*வாடகை வாகனங்கள், டாக்சி மற்றும் ஆட்டோக்களில், பயணியர் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். வாடகை டாக்சிகளில், டிரைவர் தவிர, மூன்று பயணியர்; ஆட்டோக்களில் டிரைவர் தவிர, இரண்டு பயணியர் மட்டும் பயணிக்கலாம்
*வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்; மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை, காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படலாம்
*ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், 25 சதவீதம் பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


latest tamil news



சலுான், மதுக் கடைகள் திறப்பு!



இதர, 27 மாவட்டங்களில், நோய் தொற்று குறைந்து வருவதை கருத்தில் வைத்து, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள, சில செயல்பாடுகளுடன் கூடுதலாக அனுமதிக்கப்படும் செயல்பாடுகள்:
* அழகு நிலையங்கள், சலுான்கள், குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
* அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில், காலை, 6:00 மணியிலிருந்து, காலை, 9:00 மணி வரை, நடைபயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்


latest tamil news


* மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுது நீக்கும் கடைகள், காலை, 9:00 முதல் பகல், 2:00 மணி வரை; டாஸ்மாக் கடைகள், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்பட, அனுமதி அளிக்கப்படும்
* பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை தொடர்பான, நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்
* தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்ல, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இனி, இரு சக்கர வாகனங்களில், இ -- பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள, அடையாள அட்டையுடன், பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்.
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில், 20 சதவீதப் பணியாளர்கள் அல்லது பத்து பேர் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்
* வீட்டுவசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள், 33 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்.இவ்வாறு, முதல்வர் அறிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (16+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. - தமிழா ஹிந்துக்களிடம் ஏமாறாதே ,இந்தியா
12-ஜூன்-202119:15:35 IST Report Abuse
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. இது ஊரடங்கு இல்லை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அதனால் தான் TASMAC திறந்தோம் உங்கள் எண்ணம் ஸ்டாலின் அரசு நிதி சிக்கலில் இருக்கணும் என்று என்னும் உன்னதமான ஏனாதிற்கு ஒரு pullstop வெச்சிட்டோம் , எப்ப்டி இது முத்துவேல் ஆட்சி டா , பேசிப்பிகளே இது TRILER தான் இன்னும் நிறைய இருக்கு , பெண்கள் கூட அர்ச்சகர் ஆக்கும் திட்டம் அப்புறம் என்ன
Rate this:
Devan - Chennai,இந்தியா
12-ஜூன்-202121:09:19 IST Report Abuse
Devanஅப்ப போன ஆட்சியில் கருப்பு சட்டை அனிந்து கொண்டு குடும்பத்துடன் டாஸ்மாக் திறக்க கூடாது என்று நின்றிர்களே அது யார் .உன்னக்கு வந்தால் ரத்தம் இல்லையா...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூன்-202117:48:50 IST Report Abuse
RajanRajan சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... அடேய் எங்கேடா இருந்து இந்த பாட்டு பாடுற. நீ நினைக்கிற அந்த இடத்துலே இருந்து தான் அண்ணே பாடுறேன். என்னாச்சுடா ஒனக்கு ? இல்லே அண்ணா இங்கே கணக்கெடுக்க வந்திருக்கிறேன் அம்புட்டுதான்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
12-ஜூன்-202115:14:49 IST Report Abuse
அசோக்ராஜ் டாஸ்மாக்கிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சட்டத்தை மதிக்கும் குடிமகன் ஒரு காட்சி கண்ணில் பட்டதும் வெகுண்டு விட்டார். போலீஸுக்கு துப்பு கொடுத்தார். விரைந்து வந்த ரோந்து போலீஸ் மறைந்தும் மறைத்தும் கள்ளத்தனமாக டீ விற்றுக்கொண்டு இருந்தவனை கையும் களவுமாகப் பிடித்து உதைத்து இழுத்துக்கொண்டு போனது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X