பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசியில் அமைகிறது உழவர் சந்தை: அரசுக்கு கருத்துரு சமர்ப்பிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி மற்றும் சேவூர் சுற்றுப்புறங்களை உள்ளடக்கி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களில், பெரும்பாலான விவசாயிகள், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை விற்கின்றனர். விவசாய தொழில் நிறைந்த அவிநாசியில், உழவர் சந்தை இல்லை.தற்போது, மாநிலத்தில், 120 இடங்களில், உழவர் சந்தை அமைக்க, அரசு

அவிநாசி:அவிநாசி மற்றும் சேவூர் சுற்றுப்புறங்களை உள்ளடக்கி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களில், பெரும்பாலான விவசாயிகள், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை விற்கின்றனர். விவசாய தொழில் நிறைந்த அவிநாசியில், உழவர் சந்தை இல்லை.தற்போது, மாநிலத்தில், 120 இடங்களில், உழவர் சந்தை அமைக்க, அரசு அனுமதி வழங்கி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விற்பனை துறையினரிடம் இருந்து கருத்துரு கேட்டிருக்கிறது.அதன்படி, அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில், பேரூராட்சி கட்டுப்பாட்டில், இடிக்கப்பட்ட நிலையில் உள்ள பழைய மார்கெட் அல்லது கைகாட்டிப்புதூரில் உள்ள வார சந்தையில், 15 முதல், 20 சென்ட் நிலத்தை பேரூராட்சி நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில், உழவர் சந்தை அமைக்க முடியும் என, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் கூறியதாவது:சேவூர், முறியாண்டம்பாளையம் உட்பட கிராம ஊராட்சி பகுதிகளில், உழவர் சந்தை அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினர் தாமாகவே முன் வந்து, இடம் தர தயாராக உள்ளனர்.ஆனால், அனைத்து பகுதி மக்களும், எளிதில் வந்து செல்லும் வகையிலான இடத்தில் மட்டுமே உழவர் சந்தை அமைக்க முடியும் என்பதால், அவிநாசி நகர பகுதியில் இடம் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X