பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு உதவ தேசிய 'ெஹல்ப்லைன்' சேவை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும், 'நேஷனல் ெஹல்ப் லைன்' சேவை துவங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேளையில், மாற்றுத்திறனாளிகளும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புகளில் இருந்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில், சக் ஷம் - தேசிய மாற்றுத்திறனாளிகள் நலன்காக்கும் அமைப்பு சார்பில், பிரத்யேக உதவி

திருப்பூர்:சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும், 'நேஷனல் ெஹல்ப் லைன்' சேவை துவங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேளையில், மாற்றுத்திறனாளிகளும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புகளில் இருந்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில், சக் ஷம் - தேசிய மாற்றுத்திறனாளிகள் நலன்காக்கும் அமைப்பு சார்பில், பிரத்யேக உதவி எண் வழங்கப்பட்டுள்ளது.உதவி மையத்தை தொடர்புகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உணவு பொருள், மருத்துவம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். ஆங்கிலம், இந்திய, மராத்தி, தெலுங்கு மொழிகளில் மட்டும் இவ்வசதி இருந்து வந்தது.தற்போது, தமிழ்மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், கொரோனா சேவை துவக்க நிகழ்ச்சி, 'ஆன்லைனில்' நடந்தது. சிறப்பு விருந்தினராக, ஐகோர்ட் மதுரை கிளையின் நீதிபதி சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார்.சி.டி.எஸ்., கால்சென்டர் அதிகாரி பாலகுமார், 'சக் ஷம்' அமைப்பு செயலாளர் சுகுமார், இணை செயலாளர்கள் டாக்டர் சந்தோஷ், கோவிந்தராஜ், தேசிய ஆலோசகர்களான ஆடிட்டர் ராமநாதன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நேதாஜி ஆகியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ெஹல்ப்லைன் சேவை' குறித்து பேசினர்.கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், 0120 690 4999 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். தமிழ்மொழியில் தொடர, எண் 5 ஐ அழுத்தி, தங்களது கோரிக்கையை முன் வைக்கலாம் என, திருப்பூர் மாவட்ட சக் ஷம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், 0120 690 4999 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X