பொது செய்தி

தமிழ்நாடு

மும்பையில் கன மழை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்;மும்பையில் மூன்று நாட்களாக கனமழை தொடர்கிறது. இதனால், மும்பை - கோவை குர்லா எக்ஸ்பிரஸ் எட்டு மணி நேரம் தாமதமாக வந்தது.மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கர்நாடகா வழியாக, கோவைக்கு தினமும் குர்லா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. தினசரி காலை, 5:28க்கு திருப்பூருக்கு வரும் ரயில், 6:50க்கு கோவை சென்று சேரும்.ஆனால், அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு நேற்று

திருப்பூர்;மும்பையில் மூன்று நாட்களாக கனமழை தொடர்கிறது. இதனால், மும்பை - கோவை குர்லா எக்ஸ்பிரஸ் எட்டு மணி நேரம் தாமதமாக வந்தது.மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கர்நாடகா வழியாக, கோவைக்கு தினமும் குர்லா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. தினசரி காலை, 5:28க்கு திருப்பூருக்கு வரும் ரயில், 6:50க்கு கோவை சென்று சேரும்.ஆனால், அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு நேற்று ரயில் வரவில்லை. எட்டு மணி நேரம் தாமதமாக வந்தது. திருப்பூரை மதியம், 2:20க்கு கடந்தது; மதியம், 3:05க்கு கோவை சென்று சேர்ந்தது.ரயில்வே தகவல் மைய அதிகாரிகளிடம் விசாரித்த போது,' மும்பையில் மூன்று நாட்களாக கனமழை தொடர்கிறது. தண்டவாளங்கள் மழை நீரில் முழ்கி, பிளாட்பார்மில் இருந்து ரயில்கள் வெளியே வர காலதாமதம் ஏற்பட்டது. இதனால், குர்லா எட்டு மணி நேரம் தாமதமாகியுள்ளது. இந்நிலை விரைவில் சீரடையும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X