தமிழ்நாடு

தேர்தல் தோல்வி எதிரொலி தமிழக பா.ஜ.,வில் மாற்றம்?

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழக பா.ஜ.,வில் அதிரடி மாற்றம் நடைபெறவுள்ளது. மூத்த நிர்வாகிகளுக்கு, துணை நிலை கவர்னர், மத்திய அரசின் வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி, கட்சியை பலப்படுத்த டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில்

சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழக பா.ஜ.,வில் அதிரடி மாற்றம் நடைபெறவுள்ளது. மூத்த நிர்வாகிகளுக்கு, துணை நிலை கவர்னர், மத்திய அரசின் வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி, கட்சியை பலப்படுத்த டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 16 தொகுதிகளின் தோல்வி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதி தோல்விக்கான காரணங்கள் குறித்து, சமீபத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆய்வு நடத்தப்பட்டது.


புகார்

இதில், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மாநில நிர்வாகிகள் 20 பேர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங் களை, சந்தோஷ் கேட்டறிந்தார். தோல்வி அடைந்த வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும், தோல்விக்கான காரணங்களை மேலிடத்தில் புகாராக தெரிவித்தனர்.

தங்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் 'சீட்' கிடைக்காத அதிருப்தியில், தங்களுக்காக தேர்தல் வேலை செய்யவில்லை என்று, வேட்பாளர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். தோல்விக்கு, சொந்த கட்சி பொறுப்பாளர்களே காரணமாக இருந்தனர் என்ற புகார், கட்சி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தங்களின் சுயநலத்திற்காக, தேர்தல் பணிகளை சரிவர செய்யாமல் இருந்த நிர்வாகிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு, தமிழக பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


முடிவு

வரும் 2024ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சியை பலப்படுத்தும் வகையில், மூத்த தலைவர்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை வழங்கவும், டில்லி மேலிடம் திட்டமிட்டு உள்ளது.மூத்த தலைவர்கள் சிலருக்கு, துணை நிலை கவர்னர் பதவி வழங்கவும், தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளிலிருந்து பா.ஜ.,வை நம்பி வந்தவர்களுக்கு, தகுதி அடிப்படையில் மத்திய அரசின் வாரியத் தலைவர்கள் பதவி மற்றும் கட்சி பதவிகளை வழங்கவும், டில்லி மேலிடம் முடிவு செய்துள்ளது.

இன்னும் இரண்டு மாதத்திற்குள், தமிழக பா.ஜ., நிர்வாகத்தில் களை எடுக்கும் பணி முடிந்து, புது ரத்தம் பாய்ச்சும் அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X