பொது செய்தி

தமிழ்நாடு

தீவனப் பற்றாக்குறைகால்நடை வளர்ப்போர் பாதிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் பகுதியில் தீவன பற்றாக்குறையால் கால்நடை வளர்ப்போர் சாகுபடி மேற்கொள்ளப்படாத விளை நிலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். ராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மானாவாரியாக நெல், பருத்தி, கடலை, மிளகாய் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது. 2020 ல் முதல்போக சாகுபடியில் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு இழப்பு

அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் பகுதியில் தீவன பற்றாக்குறையால் கால்நடை வளர்ப்போர் சாகுபடி மேற்கொள்ளப்படாத விளை நிலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.

ராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மானாவாரியாக நெல், பருத்தி, கடலை, மிளகாய் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது. 2020 ல் முதல்போக சாகுபடியில் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. பலர் இரண்டாம்போக சாகுபடியை தவிர்த்துள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காத நிலையில் அதனை வளர்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அச்சுந்தன்வயல் முருகானந்தம் கூறுகையில், 35 ஆடுகள் வளர்த்து வருகிறேன். அருகேயுள்ள கண்மாய், குளங்களில் தண்ணீர் உள்ளது. ஆனால் பயிர் குறைந்த அளவே சாகுபடி செய்துள்ளனர். இதனால் நீண்ட துாரம் சென்று விளைநிலத்தில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டியுள்ளது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X