பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே மாதத்தில் 120 அவசர கால அழைப்பு: உயிர் காக்கும் சேவாபாரதி இலவச ஆம்புலன்ஸ்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:சேவாபாரதியின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை, கடந்த ஒரு மாதத்தில், அவசர தேவைகளுக்காக, 120 பேர் பயன்படுத்தியுள்ளனர்.சேவாபாபரதி மாவட்ட தலைவர் விஜயகுமார் கூறியதாவது:மக்களின் அவசர தேவைகளுக்காக, சேவாபாரதி சார்பில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரண்டு இலவச ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பணியாளருக்கு, முழு கவச ஆடை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு

திருப்பூர்:சேவாபாரதியின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை, கடந்த ஒரு மாதத்தில், அவசர தேவைகளுக்காக, 120 பேர் பயன்படுத்தியுள்ளனர்.சேவாபாபரதி மாவட்ட தலைவர் விஜயகுமார் கூறியதாவது:மக்களின் அவசர தேவைகளுக்காக, சேவாபாரதி சார்பில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரண்டு இலவச ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பணியாளருக்கு, முழு கவச ஆடை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பின்னரும், சானிடைசர் மற்றும் சோப் ஆயில் பயன்படுத்தி ஆம்புலன்ஸ் சுத்தம் செய்யப்படுகிறது.நோயாளிகளின் தேவையை பொருத்து, திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, கோவை, ஈரோடு உள்ளிட்ட அருகாமை மாவட்டங்கள் வரை, ஆம்புலன்ஸ் இயக்குகிறோம். தொலை துாரமானாலும், முற்றிலும் இலவசமாகவே ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது.கொரோ னா பாதித்தோர், பரிசோதனைக்கு செல்வோர், கர்ப்பிணிகள், கண் பரிசோதனைக்கு செல்வோர் அதிகளவில் அழைக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 120 பேர், ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளனர். கொரோனா பாதித்து, மிகவும் ஆபத்தான நிலையில், 59 பேர் அழைத்துச்செல்லப்பட்டு, அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர்,80722 52354 என்ற எண்ணில் அழைத்து, சேவாபாரதியின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை, 24 மணி நேரமும் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X