மெஷின் இறக்குமதியில் சிக்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா), பல்லடம் அருகே நாரணாபுரத்தில், நிட்டிங் துறைக்கான பொது பயன்பாட்டு சேவை மையத்தை உருவாக்கியுள்ளது. 15.35 கோடி ரூபாய் மதிப்பில், இம்மையம் அமைகிறது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியிலேயே, பொதுபயன்பாட்டு மைய கட்டடம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. தமிழக அரசு, தனது பங்களிப்பில் முதல் கட்டமாக, 1.60

திருப்பூர்:தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா), பல்லடம் அருகே நாரணாபுரத்தில், நிட்டிங் துறைக்கான பொது பயன்பாட்டு சேவை மையத்தை உருவாக்கியுள்ளது. 15.35 கோடி ரூபாய் மதிப்பில், இம்மையம் அமைகிறது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியிலேயே, பொதுபயன்பாட்டு மைய கட்டடம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. தமிழக அரசு, தனது பங்களிப்பில் முதல் கட்டமாக, 1.60 கோடி ரூபாயை, கடந்த 2020, மார்ச் மாதம் வழங்கியது.கொரோனா முதல் அலையால், மத்திய அரசு மானியம் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு, மெஷின்களை கொள்முதல் செய்ய, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. முதல் அலை ஓய்ந்ததால், மார்ச்சில், மத்திய அரசு, 2.21 கோடி ரூபாய் மானியத்தை வழங்கியது.இதனால், பொது பயன்பாட்டு மையத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில், நிட்டிங் துறையினர் வேகம் காட்டினர்.ஆனால், கடந்த மே மாதம் முதல், கொரோனா இரண்டாவது அலை வீசிவருகிறது. மெஷின் இறக்குமதி செய்வோர், தங்களது வங்கியில் எல்.சி., பெற்று, வெளிநாட்டு வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், தற்போது, எல்.சி., பெறுவது சிக்கலாக உள்ளது. இதனால், நிட்டிங் துறையினர் தவிக்கின்றனர்.'சிம்கா' சங்க தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:கொரோனாவின் அடுத்தடுத்த தாக்குதல்களால், திட்டமிட்டபடி, நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்படுகிறது.ஊரடங்குக்குப்பின் தற்போது, கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தவேண்டும். வெகுவிரைவில் பொது பயன்பாட்டு மையம், இயக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X