விபத்துக்கு வழிவகுக்கும் கொடி கம்பம் அகற்றலாமே!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்துக்கு வழிவகுக்கும் கொடி கம்பம் அகற்றலாமே!

Added : ஜூன் 11, 2021
Share
பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.சட்டசபை தேர்தலுக்கு முன், நகராட்சி நிர்வாகம் மூலம் இவைகள் அகற்றப்பட்டன. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கொடிக் கம்பங்களை மீண்டும் அமைக்க கட்சியினர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருந்தும், தி.மு.க., கொடிக்கம்பம் மட்டும்
 விபத்துக்கு வழிவகுக்கும்  கொடி கம்பம் அகற்றலாமே!

பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.சட்டசபை தேர்தலுக்கு முன், நகராட்சி நிர்வாகம் மூலம் இவைகள் அகற்றப்பட்டன. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கொடிக் கம்பங்களை மீண்டும் அமைக்க கட்சியினர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருந்தும், தி.மு.க., கொடிக்கம்பம் மட்டும் புதிதாக நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த பழைய இடத்தில் கொடிக் கம்பத்தை நடாமல், இரண்டு அடி முன்பாக தேசிய நெடுஞ்சாலை அருகே கம்பம் நடப்பட்டுள்ளது.வாகன போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில் இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பலர் அப்பகுதியில் காத்திருந்து பஸ் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், பொதுமக்களுக்கும் அது இடையூறாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X