156 குழந்தை தொழிலாளர் மீட்பு அமைச்சர் கணேசன் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

156 குழந்தை தொழிலாளர் மீட்பு அமைச்சர் கணேசன் தகவல்

Added : ஜூன் 11, 2021
Share
சென்னை:''தமிழகத்தில், கடந்த ஆண்டு, 156 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்,'' என, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 12ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நடவடிக்கைஅதையொட்டி, மாநில அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி, தொழிலாளர் நலத் துறை சார்பில் நேற்று சென்னை யில்

சென்னை:''தமிழகத்தில், கடந்த ஆண்டு, 156 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்,'' என, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 12ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நடவடிக்கைஅதையொட்டி, மாநில அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி, தொழிலாளர் நலத் துறை சார்பில் நேற்று சென்னை யில் நடந்தது. தொழிலாளர் நலத் துறை செயலர் கிர்லோஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட, ராட்சத பலுான்களை பறக்க விட்டார்.'குழந்தைகளை ஒருபோதும் எவ்வித வேலைகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்; அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன்' என்ற உறுதிமொழியை, பொது மக்கள் ஏற்கும் வகையில், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

அதன்பின், குழந்தைத் தொழிலாளர்கள் முறையை அகற்ற, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, அமைச்சர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க, பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த, உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு, குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய், அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


அபராதம்

கடந்த ஆண்டு, 26 ஆயிரத்து, 990 ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 156 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்றத்தால் 17 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு, 3.95 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுஉள்ளது. குழந்தைத் தொழிலாளர் பணியில் அமர்த்தப்பட்டால், புகார் அளிக்க, '1098' கட்டணமில்லா டெலிபோன் எண் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X