பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்த வீடுகளில், 7 பேருக்கு தொற்று: சிகிச்சை மையத்தில் சேர்க்க அதிகாரி உத்தரவு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழு பேரை கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்க சிறப்பு அதிகாரி கணேசன் உத்தரவிட்டார்.திருப்பூரில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும், கொரோனா சிகிச்சை பெற்று வருவோர் பெருமளவு குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இதனால், கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கையும் குறைந்து
 அடுத்தடுத்த வீடுகளில், 7 பேருக்கு தொற்று: சிகிச்சை மையத்தில் சேர்க்க அதிகாரி உத்தரவு

திருப்பூர்:திருப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழு பேரை கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்க சிறப்பு அதிகாரி கணேசன் உத்தரவிட்டார்.திருப்பூரில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும், கொரோனா சிகிச்சை பெற்று வருவோர் பெருமளவு குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இதனால், கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.தொற்று பாதிப்பு குறிப்பிட்ட அளவு குறைந்து வரும் பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைககள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்பு அலுவலர் கணேசன் நேற்று ஆண்டிபாளையம், செந்தில் சைசிங் வீதி கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு நடத்தினார். அங்கு ஒரு காம்பவுண்டில், அடுத்தடுத்த ஏழு வீடுகளில்ஏழு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு, வீட்டு தனிமையில் இருப்பது தெரிந்தது.மிகவும் குறுகலான பகுதி என்பதால், தொற்று பரவலுக்கு வாய்ப்புள்ளது எனவே, அவர்களை உடனடியாக கொரோனா கேர் சென்டர்களில் அனுமதித்து சிகிச்சை தொடர உத்தரவிட்டார். மேலும், அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.காய்ச்சல் முகாம்அதேபோல் மாஸ்கோ நகர் கட்டுப்பாட்டு பகுதியை பார்வையிட்ட கணேசன், தொற்று பரவல் தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து, காய்ச்சல் கண்டறியும் முகாமில் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன், மாநகராட்சி உதவி கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X