எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் தோல்வி எதிரொலி: தமிழக பா.ஜ.,வில் மாற்றம்?

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழக பா.ஜ.,வில் அதிரடி மாற்றம் நடைபெறவுள்ளது. மூத்த நிர்வாகிகளுக்கு, துணை நிலை கவர்னர், மத்திய அரசின் வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி, கட்சியை பலப்படுத்த டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில்
 தேர்தல், தோல்வி, தமிழக பா.ஜ.,மாற்றம்?

சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழக பா.ஜ.,வில் அதிரடி மாற்றம் நடைபெறவுள்ளது. மூத்த நிர்வாகிகளுக்கு, துணை நிலை கவர்னர், மத்திய அரசின் வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி, கட்சியை பலப்படுத்த டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 16 தொகுதிகளின் தோல்வி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதி தோல்விக்கான காரணங்கள் குறித்து, சமீபத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆய்வு நடத்தப்பட்டது.


புகார்இதில், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மாநில நிர்வாகிகள் 20 பேர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங் களை, சந்தோஷ் கேட்டறிந்தார். தோல்வி அடைந்த வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும், தோல்விக்கான காரணங்களை மேலிடத்தில் புகாராக தெரிவித்தனர்.

தங்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் 'சீட்' கிடைக்காத அதிருப்தியில், தங்களுக்காக தேர்தல் வேலை செய்யவில்லை என்று, வேட்பாளர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். தோல்விக்கு, சொந்த கட்சி பொறுப்பாளர்களே காரணமாக இருந்தனர் என்ற புகார், கட்சி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தங்களின் சுயநலத்திற்காக, தேர்தல் பணிகளை சரிவர செய்யாமல் இருந்த நிர்வாகிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு, தமிழக பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


முடிவுவரும் 2024ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சியை பலப்படுத்தும் வகையில், மூத்த தலைவர்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை வழங்கவும், டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.மூத்த தலைவர்கள் சிலருக்கு, துணை நிலை கவர்னர் பதவி வழங்கவும், தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளிலிருந்து பா.ஜ.,வை நம்பி வந்தவர்களுக்கு, தகுதி அடிப்படையில் மத்திய அரசின் வாரியத் தலைவர்கள் பதவி மற்றும் கட்சி பதவிகளை வழங்கவும், டில்லி மேலிடம் முடிவு செய்துள்ளது.இன்னும் இரண்டு மாதத்திற்குள், தமிழக பா.ஜ., நிர்வாகத்தில் களை எடுக்கும் பணி முடிந்து, புது ரத்தம் பாய்ச்சும் அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jysen - Madurai,இந்தியா
12-ஜூன்-202114:37:18 IST Report Abuse
jysen The workers are used as curry leaves and ignored. In WB, Kerala and Tamilnadu the BJP workers are harmed and ed but the party at the centre never comes to the aid of the distressed party workers. The BJP has become a Spineless party. If this tr continues 1924 will become an impossible task. Presently there is no connect between the central leaders and workers. In WB and Kerala the BJP workers have become easy targets for the islamic terrorists and communists. Without the staunch support from the high command it is impossible to broaden the base.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
12-ஜூன்-202114:08:32 IST Report Abuse
அசோக்ராஜ் என்னமோ இப்போதான் முதல் தடவை தோத்துப்போன மாதிரி? அந்த மாஜி ஐபீஎஸ்ஸை நினைச்சாத்தான் அளுவாச்சியா வருது. அரசனை நம்பி புருசனை விட்டுப்புட்டு ..... ஹூம் .... விதி யாரைத்தான் விட்டது?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜூன்-202112:27:26 IST Report Abuse
Lion Drsekar ஒன்றுமே நடக்கப்போவது இல்லை, இங்கு யாருமே தொண்டர்களை மதிப்பதில்லை, எல்லோருமே தலைவர்கள், மற்ற அபைப்புகள் தொண்டர்களுக்கு ஏதாவது என்றால் உச்ச நீதிமன்றம் வரை செல்ல மிகப்பெரிய அமைப்பை வைத்துக்கொண்டு செயல்படும்போது, இவர்கள் ஏதோ ஒரு உலகில் இருக்கிறார்கள், மேலும் மக்களுடன் தொடர்பே அறவே கிடையாது, சொன்னது எதையுமே செய்ததில்லை, முக்கியமாக நதிகள் இணைப்பு இந்த ஆறு ஆண்டுகளில் முடித்திருக்கலாம், நம் பதிவு நமக்கு மட்டுமே ஆறுதல் தருவதாக இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X