கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இணை நோய்களால் இறந்ததாக சான்றிதழ் நிபுணர் குழு ஆய்வுக்கு ஐகோர்ட் அறிவுரை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா காலத்தில்,இணை நோய்களால் மரணம் அடைந்ததாக அளிக்கப்பட்ட சான்றிதழ்களை, நிபுணர் குழு வாயிலாக ஆய்வு செய்யலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா பாதிப்பால் மரணம் அடைபவர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை அறிவித்துஉள்ளன. அரசால்

சென்னை:கொரோனா காலத்தில்,இணை நோய்களால் மரணம் அடைந்ததாக அளிக்கப்பட்ட சான்றிதழ்களை, நிபுணர் குழு வாயிலாக ஆய்வு செய்யலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா பாதிப்பால் மரணம் அடைபவர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை அறிவித்துஉள்ளன. அரசால் அறிவிக்கப்பட்ட பலன்களை பெற வேண்டும் என்றால், கொரோனா மரணமாக இருக்க வேண்டும்.


சான்றிதழ்கள்

மருத்துவமனைகள் அளிக்கும் சான்றிதழில், கொரோனாவால் மரணம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், நுரையீரல் பாதிப்பு, இருதய நோய் என, சான்றிதழில் குறிப்பிடுகின்றனர். இதனால், ஏழை குடும்பங்களால் நிவாரணம் பெற முடியாது.கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பல மரணங்களுக்கு, வேறு காரணங்களை குறிப்பிட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவருக்கு இணை நோய் இருந்தாலும், அவரது மரணத்துக்கு இணை நோயை காரணமாக குறிப்பிடுகின்றனர்.எனவே, இறப்புக்கான காரணத்தை சான்றிதழில் சரியாக குறிப்பிடுவதை உறுதி செய்ய, உரிய கொள்கை வகுத்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


ஆஜர்

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் டி.மோகன், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர் பி.முத்துகுமார், மாநகராட்சி சார்பில் கார்த்திகா அசோக் ஆஜராகினர்.


புகார்

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:முக்கியமான பிரச்னையை, மனுதாரர் எழுப்பி உள்ளார். கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணங்கள், முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற புகார், நாடு முழுதும் உள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை, பரிசோதனை அறிக்கையில் கொரோனா, 'பாசிட்டிவ்' என, குறிப்பிடவில்லை என்றால், அதை தொடர்ந்து ஏற்படும் மரணத்தையும், கொரோனா மரணமாக பதிவு செய்வதில்லை என, ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

மரணங்கள் குறித்த துல்லியமான, சரியான பதிவு, இதுபோன்ற நோய் தொற்று குறித்த ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கொரோனா தொற்றால் மரணம் அடைந்து, சான்றிதழில் அதுபற்றி குறிப்பிடவில்லை என்றால், அந்த குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்காமல் போய் விடும்.எனவே, தேர்ச்சி பெற்ற குழு வாயிலாக, தகுந்த ஆய்வு மேற்கொள்ளலாம்; தேவை என்றால், ஏற்கனவே வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ளலாம்.அதனால், மத்திய, மாநில அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களின் பலன்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுக்கப்படாமல் இருக்கும்.


உத்தரவு

இது குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். இதில், மத்திய அரசின் பதிலையும் பெற ஏதுவாக, மனுவின் நகலை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணை, வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X