பொது செய்தி

தமிழ்நாடு

காகிதத்தில் 'டோக்ரா' பொம்மை செய்து அசத்தல்: 'நிப்ட்-டீ' மாணவி காட்டிய கலைநயம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:உலோகத்துக்கு இணையாக, காகிதத்திலேயே கலைநயம் மிக்க டோக்ரா பொம்மைகளை உருவாக்கி அசத்தியுள்ளார், கல்லுாரி மாணவி இலக்கியா.திருப்பூர், பெரியார் காலனியை சேர்ந்தவர் இலக்கியா; 'நிப்ட்-டீ' கல்லுாரியில் முதலாம் ஆண்டு அப்பேரல் பேஷன் டிசைன் படிக்கிறார். இவர், செய்தித்தாள்களை பயன்படுத்தி, சட்டீஸ்கர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற டோக்ரா பொம்மைகளை தத்ரூபமாக
 காகிதத்தில் 'டோக்ரா' பொம்மை செய்து அசத்தல்: 'நிப்ட்-டீ' மாணவி காட்டிய கலைநயம்

திருப்பூர்:உலோகத்துக்கு இணையாக, காகிதத்திலேயே கலைநயம் மிக்க டோக்ரா பொம்மைகளை உருவாக்கி அசத்தியுள்ளார், கல்லுாரி மாணவி இலக்கியா.திருப்பூர், பெரியார் காலனியை சேர்ந்தவர் இலக்கியா; 'நிப்ட்-டீ' கல்லுாரியில் முதலாம் ஆண்டு அப்பேரல் பேஷன் டிசைன் படிக்கிறார். இவர், செய்தித்தாள்களை பயன்படுத்தி, சட்டீஸ்கர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற டோக்ரா பொம்மைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போன்று, சட்டீஸ்கர் மாநிலத்தில், டோக்ரா பொம்மைகள் பிரசித்திபெற்றவை. பொதுவாக இவை, இரும்பு அல்லது அலுமினியத்தில் உருவாக்கப்படுகின்றன; அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இந்த பொம்மைகளை, காகிதத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை துவக்கினேன். ஏராளமான காகிதங்களை ஒன்று சேர்த்து, மடித்து, பசை தடவி ஒட்டி, டோக்ரா பொம்மைகளை உருவாக்கியுள்ளேன். அவற்றுக்கு, கருப்பு, காவி நிற வண்ணங்கள் பூசியுள்ளேன்.காகிதம், பசை, பெயின்ட், தெர்மாகோல் ஆகிய எளிதில் கிடைக்க கூடிய பொருட்களைகொண்டு உருவாக்கப்பட்டுள்ள டோக்ரா பொம்மைகளை, குறைந்த விலைக்கு சந்தைப்படுத்த முடியும். அனைவரும் எளிதில் பொம்மைகளை வாங்கி, வீட்டை அலங்கரிக்கலாம்.ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள பெண்கள், இதுபோன்று எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி, பொம்மைகளை உருவாக்குவது சிறந்த பொழுதுபோக்காகவும், வருமானம் ஈட்டித்தருவதாகவும் அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X