சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி பாலியல் பலாத்காரம் 'ஜூடோ' மாஸ்டரிடம் கிடுக்கிப்பிடி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:தன்னிடம் பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவியை, காரில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஜூடோ மாஸ்டர் கெபிராஜிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லுாரி ஒன்றில் படித்து வந்தார். ஜூடோ போட்டிகளில் பதக்கம் பெற வேண்டும் என்ற கனவில், அவர் பள்ளி படிப்பின்போது அறிமுகமான, ஜூடோ

சென்னை:தன்னிடம் பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவியை, காரில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஜூடோ மாஸ்டர் கெபிராஜிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லுாரி ஒன்றில் படித்து வந்தார். ஜூடோ போட்டிகளில் பதக்கம் பெற வேண்டும் என்ற கனவில், அவர் பள்ளி படிப்பின்போது அறிமுகமான, ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை சந்தித்து பயிற்சி பெற்று வந்தார்.இந்த மாணவியை கெபிராஜ் 2014ல், நாமக்கல்லில் நடந்த போட்டியில் பங்கேற்க காரில் அழைத்துச் சென்றார்.

காரில் சென்னைக்கு திரும்பும் போது, கெபிராஜ் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து அந்த மாணவி, போலீசில் புகார் அளித்தார். சென்னை அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரித்து, கெபிராஜை, ஜூன் 30ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவரது நண்பர்களிடம் நடந்த விசாரணையில், கெபிராஜின் காம லீலைகள் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது.

மேலும், கெபிராஜ் மீது பல மாணவியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர். இதனால், இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்.இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மகளிர் போலீசாரிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி, விசாரணையை துவக்கினர். விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமையிலான சி.பி.சி.ஐ.டி., போலீசார், கெபிராஜை இரண்டு நாட்கள், தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கெபிராஜுக்கு சினிமா தொடர்பு அதிகம் என, தெரியவந்துள்ளது. இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவியை, நண்பர்களுக்கு விருந்து படைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கெபிராஜ், பெண்கள் சிலருடன் குத்தாட்டம் போடும், 'வீடியோ'வையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X