கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இயற்கை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி சேர்க்கையை ரத்து செய்ய தடை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:இயற்கை மருத்துவப் படிப்பில் சேர்த்து படித்து வரும் மாணவியின் சேர்க்கையை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான வீரலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு:பளு துாக்கும் பயிற்சியில் ஈடுபட்டதால், பிளஸ் 2 வகுப்பை, தேசிய திறந்த நிலை பள்ளியில் படித்தேன். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர

சென்னை:இயற்கை மருத்துவப் படிப்பில் சேர்த்து படித்து வரும் மாணவியின் சேர்க்கையை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான வீரலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு:பளு துாக்கும் பயிற்சியில் ஈடுபட்டதால், பிளஸ் 2 வகுப்பை, தேசிய திறந்த நிலை பள்ளியில் படித்தேன். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர விண்ணப்பித்தேன்; கவுன்சிலிங்கில் பங்கேற்றேன். இரண்டாவது கவுன்சிலிங்கில், கோவையில் உள்ள கல்லுாரியில் இடம் கிடைத்தது.கடந்த மார்ச் மாதம் படிப்பில் சேர்ந்து விட்டேன்.

தகுதி சான்றிதழ் தாக்கல் செய்யும்படி, கல்லுாரி நிர்வாகம் கேட்டது. விளக்க குறிப்பேட்டில், திறந்த நிலை பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள், இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என, கூறப்பட்டுள்ளது. அதனால், தகுதி சான்றிதழை, மருத்துவ பல்கலை எனக்கு வழங்காது. திறந்த நிலை பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள், இயற்கை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்பது சட்ட விரோதமானது.

இதேபோல 2019 -- 20ம் ஆண்டு வெளியிடப்பட்ட விளக்க குறிப்பேட்டிலும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. எனவே, திறந்த நிலை பள்ளியில் படித்தவர்களுக்கு தகுதி இல்லை என்ற பிரிவை, ரத்து செய்ய வேண்டும். எனது சேர்க்கையை ரத்து செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் அளிக்க வழக்கறிஞர் முத்துக்குமார் 'நோட்டீஸ்' பெற்று கொண்டார். மனுதாரரின் சேர்க்கையை ரத்து செய்ய எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகத்துக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X