பொது செய்தி

தமிழ்நாடு

நாடு வளம் பெற, குழந்தைகள் நலம் பெறணும்!

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாட்டின் இறையாண்மைக்கும், வளர்ச்சிக்கும், முட்டுக்கட்டையாக இருப்பது தீண்டாமை, குழந்தை தொழிலாளர் முறை, கொத்தடிமை முறை... கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன.இருப்பினும், குழந்தை தொழிலாளர் என்பது, அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, இடம் பெயரும் தொழிலாளர்கள் மத்தியில், குழந்தை தொழிலாளர் முறை பரவலாக காணப்படுகிறது.வட
 நாடு வளம் பெற, குழந்தைகள் நலம் பெறணும்!

நாட்டின் இறையாண்மைக்கும், வளர்ச்சிக்கும், முட்டுக்கட்டையாக இருப்பது தீண்டாமை, குழந்தை தொழிலாளர் முறை, கொத்தடிமை முறை... கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன.

இருப்பினும், குழந்தை தொழிலாளர் என்பது, அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, இடம் பெயரும் தொழிலாளர்கள் மத்தியில், குழந்தை தொழிலாளர் முறை பரவலாக காணப்படுகிறது.வட மாநிலத்திலிருந்து, கட்டட வேலைக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளின் வாழ்வு, இருண்ட காலத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏழ்மை, வறுமை... இவைதான், குழந்தைகளை வேலைக்குச் சென்று சம்பாதிக்க வைக்கும் சூழலை குடும்பத்தினருக்கு ஏற்படுத்தி விடுகிறது.அதுவும், கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என, இந்த காலகட்டத்தை பிரித்து பார்க்க வேண்டியது, காலத்தின் அவசியமாக மாறி போயிருக்கிறது.

சட்டப்படி, 14 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகள் என வகைப்படுத்தப் படுகின்றனர்.இவர்கள் அனைவரும், கட்டாயம் கல்விக்கூடங்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பது சட்டம்.அதே நேரம், 14 முதல்,18 வயது வரை யுள்ளவர்கள், வளரிளம் சமுதாயத்தினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தங்களது விருப்பம், பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில், வேலைக்கு செல்லலாம் என, சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.அதுவும், இவர்கள் பணி செய்யும் நிறுவனங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட தொழில் கூடங்களில், ஆறு மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்; இடையில் சில நிமிடம் இடைவெளி வழங்க வேண்டும்; அவர்களுக்கு 'ஓவர்டைம்' வழங்க கூடாது; இரவு பணியில் ஈடுபடுத்த கூடாது; வாரம் ஒரு முறை கட்டாயம் விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல சலுகைகள் நடைமுறையில் உள்ளன.

குழந்தை நல ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை என்பது ஒழிக்கப்பட்டிருக்கிறது; இது, வரவேற்கத்தக்கது. ஆனால், வளரிளம் சமுதாயத்தினர், பல்வேறு தொழில் நிறுவனங்களில், பல மணி நேரம் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு இலவச கட்டாய கல்வி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கண்டிப்பாக பள்ளி நிர்வாகங்கள், குறிப்பாக, அரசு பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு, கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தன்னிடம் படிக்கும் குழந்தைகள் கல்வியை தொடர்கின்றனரா? இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம், மீண்டும் குழந்தை தொழிலாளர் உருவாவதை தடுக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மாவட்டம் வாரியாக குழந்தை தொழிலாளர் குறித்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியமானதாக மாறிப் போயிருக்கிறது. வளமான பாரதம் உருவாக நலமான குழந்தைகள் உள்ள சமுதாயத்தை வார்த்தெடுப்பது அவசியம் தானே...


இன்று, குழந்தைதொழிலாளர் முறை ஒழிப்பு தினம்



- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூன்-202115:52:53 IST Report Abuse
மனுநீதி இன்னும் எத்தனையோ குழந்தை தொழிலாளர்கள் பணக்காரர் வீடுகளின் சமையல் அறையை அலங்கரித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X