அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் தண்ணீர் திறப்பு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:'உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதம்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தின் அரிசி களஞ்சியமாக, காவிரி டெல்டா பகுதி உள்ளது. மேட்டூர் அணை, டெல்டாவின் வாழ்வாதாரமாக உள்ளது.

சென்னை:'உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதம்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தின் அரிசி களஞ்சியமாக, காவிரி டெல்டா பகுதி உள்ளது. மேட்டூர் அணை, டெல்டாவின் வாழ்வாதாரமாக உள்ளது. வேளாண் உற்பத்திக்கு, அதையே நம்பி உள்ளோம். இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள், குறுவை மற்றும் சம்பா பருவ பயிர் சாகுபடி செய்ய, ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தென்மேற்கு பருவ மழை சராசரியாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு அடிப்படையில், டெல்டா நீர்ப் பாசனத்திற்கு வழக்கம்போல், ஜூன் 12ல், மேட்டூர் அணை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.தென்மேற்கு பருவ மழையால், டெல்டா பகுதி அதிகம் பயன் பெறுவதில்லை. குறுவை பயிர் சாகுபடி, மேட்டூர் அணை தண்ணீரையே முழுமையாக நம்பி உள்ளது.

தண்ணீர் திறப்பில் பாதிப்பு ஏற்பட்டால், பயிர் பாதிக்கப்படும். சம்பா பயிர் சாகுபடியையும் பாதிக்கும். எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் மாதம்தோறும் உரிய அளவில், தண்ணீர் திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, உரிய அறிவுரை வழங்கி, காவிரியில் மாதாந்திர அளவின்படி, தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X