பொது செய்தி

தமிழ்நாடு

தெரு நாடகம் தேவையா? கேள்வி கேட்கும் மக்கள்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
அவிநாசி,:ஊரடங்கால், பொதுமக்கள், வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், தேவையின்றி வெளியில் சுற்றுவோர் போலீசாரால், விரட்டி விடப்படுகின்றனர்; அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.இத்தகைய சூழலில், அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில், கொரோனா விழிப்புணர்வு குறித்து தெரு நாடகம் நடந்தது. இதுபோன்ற வீதி நாடகங்களை பொதுமக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை; அதற்கான அனுமதியும்
 தெரு நாடகம் தேவையா? கேள்வி கேட்கும் மக்கள்

அவிநாசி,:ஊரடங்கால், பொதுமக்கள், வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், தேவையின்றி வெளியில் சுற்றுவோர் போலீசாரால், விரட்டி விடப்படுகின்றனர்; அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.இத்தகைய சூழலில், அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில், கொரோனா விழிப்புணர்வு குறித்து தெரு நாடகம் நடந்தது. இதுபோன்ற வீதி நாடகங்களை பொதுமக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை; அதற்கான அனுமதியும் கிடையாது. மாறாக, நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கட்சியினர் தான் வேடிக்கை பார்க்க வேண்டியுள்ளது.அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் சார்பில், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில், வீதி, வீதியாக தெரு தெருவாக சென்று, தொற்று தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதற்கிடையில், வீதி நாடகம் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி, அதிகாரிகள் மத்தியிலேயே எழுந்திருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X