பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி விஷயத்தில் மக்களுக்கு மன உளைச்சல்: அமைச்சர்களிடம் மா.கம்யூ., மனு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசிக்கு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர்கள் நேரு, பெரிய கருப்பன், சாமிநாதன் உள்ளிட்டோர் வந்து சென்றனர்.அமைச்சர்களிடம் மா.கம்யூ., சார்பில் வழங்கப்பட்ட மனு:அவிநாசி ஒன்றியத்தில், 31 ஊராட்சிகள், இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. இங்குள்ள கிராமப்புற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், டூவீலர் உள்ளிட்ட வாகன வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் பலர், ஊரடங்கு

அவிநாசி:அவிநாசிக்கு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர்கள் நேரு, பெரிய கருப்பன், சாமிநாதன் உள்ளிட்டோர் வந்து சென்றனர்.அமைச்சர்களிடம் மா.கம்யூ., சார்பில் வழங்கப்பட்ட மனு:அவிநாசி ஒன்றியத்தில், 31 ஊராட்சிகள், இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. இங்குள்ள கிராமப்புற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், டூவீலர் உள்ளிட்ட வாகன வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் பலர், ஊரடங்கு காலத்தில் சிரமப்பட்டு, அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.இதனால், அலைச்சலும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். வாகன வசதி இல்லாதவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதே இல்லை. எனவே, அவிநாசியில் நோய் தொற்றுள்ள, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம் அமைத்து, பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும். 'டோக்கன்' முறை அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி போடும் போது, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, அவிநாசி தாசில்தாரிடமும், கம்யூ., கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாச லம், ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X