பொது செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் டெலிவரி ஊழியர் 30ம் தேதி முதல் வேலை நிறுத்தம்?

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில், வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, காஸ் சிலிண்டர் வினியோக பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், மூன்று காஸ் நிறுவனங்கள் சார்பில், நான்கு லட்சம் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஏஜன்சிகளில் பணியாற்றும், 2,500க்கும் அதிகமான பணியாளர், வீடு வீடாக சென்று சிலிண்டர் வழங்கி
 காஸ் சிலிண்டர் டெலிவரி ஊழியர் 30ம் தேதி முதல் வேலை நிறுத்தம்?

திருப்பூர்:கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில், வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, காஸ் சிலிண்டர் வினியோக பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், மூன்று காஸ் நிறுவனங்கள் சார்பில், நான்கு லட்சம் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஏஜன்சிகளில் பணியாற்றும், 2,500க்கும் அதிகமான பணியாளர், வீடு வீடாக சென்று சிலிண்டர் வழங்கி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு காலத்திலும், வீடு வீடாக சென்று சிலிண்டர் வினியோகம் செய்து வருகின்றனர்.தமிழ்நாடு எல்.பி.ஜி., சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தின், திருப்பூர் மாவட்ட செயலாளர் வீரமணி கூறியதாவது:காஸ் ஏஜன்சிகள், சிலிண்டர் வினியோகிக்கும் பணியாளருக்கு தகுந்த உதவி செய்ய வேண்டும். மாறாக, கொத்தடிமைகளை போல் நடத்தி வருகின்றனர். உடல் வலிக்க, சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளருக்கு, மாத சம்பளம், இ.எஸ்.ஐ., - பி.எப்., வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.மத்திய, மாநில அரசுகள், காஸ் சிலிண்டர் வழங்கும் நபர்களை, முன்கள பணியாளராக நியமிக்க வேண்டும். சிலிண்டர் டெலிவரி மேன்கள் அச்சமின்றி பணியாற்ற உதவ வேண்டும்.தொழிலாளர் இறக்கும்பட்சத்தில், அவரது குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில், 30ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X