பொது செய்தி

தமிழ்நாடு

உதவிகள் ஓய்வதில்லை

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
ரூ.12 லட்சம்; ஆசிரியர்கள் தாராளம்பல்லடம் வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 385 ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம், 8.75 லட்சம் ரூபாய். இதில், 4 ஆசிரியர்கள் மூன்று நாள் சம்பளமும், 10 ஆசிரியர்கள் ஐந்து நாள் சம்பளமும், மூன்று பேர் பத்து நாள் சம்பளத்தையும் வழங்கி உள்ளனர். புள்ளியப்பம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், அதிகபட்சமாக, 20
 உதவிகள் ஓய்வதில்லை

ரூ.12 லட்சம்; ஆசிரியர்கள் தாராளம்பல்லடம் வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 385 ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம், 8.75 லட்சம் ரூபாய். இதில், 4 ஆசிரியர்கள் மூன்று நாள் சம்பளமும், 10 ஆசிரியர்கள் ஐந்து நாள் சம்பளமும், மூன்று பேர் பத்து நாள் சம்பளத்தையும் வழங்கி உள்ளனர். புள்ளியப்பம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், அதிகபட்சமாக, 20 நாள் சம்பளத்தை வழங்கியுள்ளார். மொத்தம், 385 பேரிடம், மொத்தம், 12 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.---ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்பல்லடம் அரசு மருத்துவமனையின், அரசு மருத்துவமனையின் தேவையை உணர்ந்து, நோயாளிகளுக்கான உணவு, முக கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பலவற்றையும் தன்னார்வலர்கள் பலர் வழங்கி வருகின்றனர். அவ்வகையில், பல்லடம் அருணோதயா மில் சார்பில், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து இதை இறக்குமதி செய்து, மருத்துவர்கள், செவிலியர்களிடம், மில் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் வழங்கினார்.---இளைஞர்கள் குழுவினர் சேவைவெள்ளகோவில் நகராட்சி 12வது வார்டு புள்ளச்செல்லிபாளையத்தில் 15 இளைஞர்கள் குழுவாக ஒன்றிணைந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சாலையோரம் உணவின்றி தவிப்பவர்களுக்கு கடந்த 10 நாட்களாக உணவு அளித்து வருகின்றனர். தினசரி 150 பேருக்கு சாதம் தயாரித்து வழங்கி வருகின்றனர். இவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.---மகாவிஷ்ணு சேவா சங்கம்திருப்பூரில் இயங்கி வரும் மகாவிஷ்ணு சேவா சங்கம் சார்பில், ஊரடங்கு துவங்கிய நாளிலிருந்து, தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் என அனைவருக்கும் மூன்று வேளை சத்து மிக்க உணவுகள் மற்றும் காலை மாலை இரு வேளையிலும் வழங்கி வருகின்றனர். இதுதவிர, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு காலை மற்றும் மாலையில், சிற்றுண்டியும் வழங்கி வரும், இவர்களை பலரும் பாராட்டுகின்றனர்.---துாய்மை பணியாளருக்கு உணவுகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சியை சேர்ந்த, 130 துாய்மை பணியாளர்களுக்கு மா.கம்யூ., சார்பில், மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மா.கம்யூ., கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, பாலசுப்ரமணியன், சி.ஐ.டி.யு., சங்க முன்னாள் நிர்வாகி நடராஜன், திருமுருகன்பூண்டி நகர நிர்வாகி பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.---சேவா பாரதி மருத்துவ முகாம்பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில், சேவா பாரதி அமைப்பின் சார்பில், இலவச கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர்கள் பாரதி கண்ணன் தலைமை வகித்தார். நாகராஜ்,கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனையை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொறுப்பாளர்கள் ஆனந்தன், சரவணன், சிவகுமார், அசோக் பங்கேற்றனர். நிர்வாகி யுவராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X