பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் மளிகை தொகுப்பு வந்தாச்சு!

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள, மளிகை தொகுப்பு, நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு வந்துள்ளன.தமிழக அரசு, கொரோனா ஊரடங்கிற்கு நிவாரண உதவியின் இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாயும், 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பையும் வழங்க உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், நேற்று முதல் வீடு வீடாக 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியுள்ளது.ரேஷன் பணியாளர்கள், வீடு வீடாக
 ரேஷன் மளிகை தொகுப்பு வந்தாச்சு!

திருப்பூர்:ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள, மளிகை தொகுப்பு, நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு வந்துள்ளன.தமிழக அரசு, கொரோனா ஊரடங்கிற்கு நிவாரண உதவியின் இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாயும், 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பையும் வழங்க உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், நேற்று முதல் வீடு வீடாக 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியுள்ளது.ரேஷன் பணியாளர்கள், வீடு வீடாக சென்று 'டோக்கன்' வழங்கி வருகின்றனர். நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்து, தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது. ஒரு துணிப்பையில், வைத்து மளிகை தொகுப்பு வழங்கப்படுகிறது.மஞ்சள் துாள் - 100 கிராம் , சர்க்கரை - 500 கிராம், கோதுமை மாவு -1 கிலோ, உப்பு - 1 கிலோ, ரவை - 1 கிலோ, மிளகாய் துாள் -100 கிராம் , கடுகு - 100 கிராம், சீரகம் -100 கிராம், ஊட்டி டீத்துாள் - 200 கிராம், உளுந்து- அரை கிலோ , கடலை பருப்பு - 250 கிராம், புளி - 250 கிராம், குளியல் சோப் மற்றும் ஒரு சலவை சோப் ஆகிய 14 பொருட்கள் இடம்பெற்றுள்ளன.குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில்,'14 பொருட்கள் அடங்கிய, மளிகை பொருள்தொகுப்பும், 2,000 ரூபாய் நிவாரண உதவியும், ரேஷன் கடையில் வழங்கப்படும். டோக்கன் வினியோகம் முடிந்ததும், 15 ம் தேதி முதல், பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X