சாலையோரம் கழிவுகள்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட வள்ளியரச்சல் சாலையில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து ஒரு கி.மீ., வடக்கு சாலையோரம் கட்டட கழிவுகள் மற்றும் பஞ்சு மூட்டைகளை கொட்டி செல்வதால், குப்பைகள் சாலை வரை பரவி வாகனங்களில் செல்வோருக்கு இடையூறாக உள்ளது. எனவே, இவ்வாறு பொதுமக்களின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிறுவனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுெமன,

வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட வள்ளியரச்சல் சாலையில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து ஒரு கி.மீ., வடக்கு சாலையோரம் கட்டட கழிவுகள் மற்றும் பஞ்சு மூட்டைகளை கொட்டி செல்வதால், குப்பைகள் சாலை வரை பரவி வாகனங்களில் செல்வோருக்கு இடையூறாக உள்ளது. எனவே, இவ்வாறு பொதுமக்களின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிறுவனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுெமன, நகராட்சி நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வாகனங்கள் பறிமுதல்திருப்பூர் மாவட்டத்தில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில், குன்னத்துார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்யாவசிய தேவையின்றி டூவீலரில் சுற்றி திரிந்த 275 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். பெருமாநல்லுார் போலீசார் 296 பேர் மீது வழக்கு பதிவு செய்து, டூவீலர்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனை தொடரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.தாமாக முன்வரும் மக்கள்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருப்பூரில் வீடு வீடாக ஆய்வு செய்ய 1,300 தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று 18வது வார்டு வாவிபாளையம் பள்ளியில் பரிசோதனை முகாம் நடந்தது. இதில், 200 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனைக்கு வந்தவர்களுக்கு கபசுர குடிநீர், மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. இதற்கு முன் பரிசோதனையில் ஆர்வம் காட்டாத மக்கள், தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர்.தபால் குறைகேட்பு கூட்டம்திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் சார்பில், வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'கோவை மண்டல அளவிலான, நுகர்வோரின் குறைதீர்க்கும், 'தக் அதாலத்' முகாம், வரும் 29ல், கோவை, தலைமை தபால் நிலையத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், மணியார்டர், சேமிப்பு கணக்கு, பதிவு தபால் உள்ளிட்ட சேவைகள் குறித்த புகார்களை கடிதம் மூலம் அனுப்பி வைக்கலாம். விரும்புவோர், 'மேற்கு மண்டல தபால்துறை தலைவர் அலுவலகம், ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம், கோவை - 2' என்ற முகவரிக்கு, 20ம் தேதிக்குள் அனுப்பலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.பரவல் தடுக்க தெருக்கள் அடைப்புவெள்ளகோவில் நகராட்சியில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், உப்புப்பாளையம் கிழக்கு காலனி, சேனாபதிபாளையம், சக்தி நகர், வேலப்பநாயக்கன்வலசு, கே.வி., பழனிசாமி நகர் உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் அடைக்கப்பட்டன. அப்பகுதிகளில், வெள்ளகோவில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் சார்பில் முகாம் நடத்தப்பட்டது. சொரியங்கிணற்றுப்பாளையம் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.கள் விற்பனை; ஒருவர் கைதுகுன்னத்துார் அடுத்த குறிஞ்சி ஊராட்சியில் கள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சி ஊராட்சி, கொல்லங்கோடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி, 46, விவசாயி. இவர் கள் விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, கருப்பசாமியை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 20 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X