பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 836 பேர் குணம் :தொற்று பாதிப்பு குறைகிறது 

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று மட்டும், 836 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் துவக்கம் முதல் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே, 31ம் தேதி, ஒரு நாள் பாதிப்பு, 1,373 ஆக இருந்தது. கடந்த, 8ம் தேதி ஆயிரத்துக்கு கீழ் பாதிப்பு குறைந்தது. நேற்று ஒரே நாளில், 836 பேர், மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முடிந்து

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று மட்டும், 836 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் துவக்கம் முதல் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே, 31ம் தேதி, ஒரு நாள் பாதிப்பு, 1,373 ஆக இருந்தது. கடந்த, 8ம் தேதி ஆயிரத்துக்கு கீழ் பாதிப்பு குறைந்தது. நேற்று ஒரே நாளில், 836 பேர், மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முடிந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று புதிதாக, 853 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்புக்கு, நேற்று 13 பேர் பலியாகினர். மாவட்டத்தில் இதுவரை, 625 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பாதிப்பு ஒருபுறம் குறைந்து, மருத்துவமனையில் இருந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து ஆறுதல் அளித்தாலும், இறப்பவர் எண்ணிக்கை மறுபுறம் அதிகரிக்கிறது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'வீடு வீடாக பரிசோதனை நடத்தப்படுகிறது. தொற்று உறுதியானவர் தெரியவந்தால், உடனடியாக அப்பகுதியில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. ஆரம்ப நிலையில் தொற்று கண்டறிப்பட்டு, சிகிச்சை எடுத்து கொண்டால், எளிதில் குணமாகி வீடு திரும்ப முடியும். எனவே, அறிகுறி, தொற்று பாதிப்பு தெரிய வந்தால், உடனே டாக்டர் ஆலோசனை பெற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X