பொது செய்தி

தமிழ்நாடு

புத்தகங்கள் பள்ளிக்கு செல்ல ரெடி!

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:புதிய கல்வியாண்டுக்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில்,ஜூன் 3வது வாரத்தில் இருந்து பிளஸ் 1 வகுப்புகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பாட புத்தகங்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.முதல் பருவத்திற்கான பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இதர

திருப்பூர்:புதிய கல்வியாண்டுக்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில்,ஜூன் 3வது வாரத்தில் இருந்து பிளஸ் 1 வகுப்புகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பாட புத்தகங்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.முதல் பருவத்திற்கான பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்கள் மாவட்டம் அல்லது ஒன்றிய மையங்களில் இருந்து பள்ளிக்கு நேரடியாக கொண்டு செல்ல போக்குவரத்து செலவினத்தொகை கல்வித்துறை சார்பில் விடுவிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் கல்வி மாவட்டத்திற்கான பாடப்புத்தகம், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு எப்போது வழங்க வேண்டும் என்பது குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X