சென்னை : 'ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக, தமிழகத்தில் மதுக்கடைகளை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில், தினசரி கொரோனா தொற்று பரவல் குறையும் விகிதம், நான்கு நாட்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. இத்தகையை சூழலில் மதுக்கடைகளை திறப்பது, அழகு நிலையங்கள் செயல்படுவது தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும்.
ஒரு புறம் கொரோனா நிவாரண நிதியாக 2,000 ரூபாய் வழங்கி விட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம். கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த தி.மு.க., இப்போது அதே தவறை செய்யலாமா; ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE