பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைனில்' ஜமாபந்தி மனுக்கள்: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்;ஜமாபந்தியில் கொடுக்க வேண்டிய மனுக்களை, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து, பயன்பெறலாம் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு, வருவாய்த்துறை பதிவேடுகளை சரிபார்க்கும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயத்தை, ஆண்டுக்கு ஒருமுறை நடத்துகிறது. நிதியாண்டில் நடக்கும் கணக்கு பதிவு விவரங்கள், பசலி ஆண்டில் (ஜூலை - ஜூன்) சரிபார்த்து ஒப்புதல்

திருப்பூர்;ஜமாபந்தியில் கொடுக்க வேண்டிய மனுக்களை, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து, பயன்பெறலாம் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு, வருவாய்த்துறை பதிவேடுகளை சரிபார்க்கும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயத்தை, ஆண்டுக்கு ஒருமுறை நடத்துகிறது. நிதியாண்டில் நடக்கும் கணக்கு பதிவு விவரங்கள், பசலி ஆண்டில் (ஜூலை - ஜூன்) சரிபார்த்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது.நடப்பு பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி, இம்மாத இறுதியில் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில், 'ஆன்லைன்' மூலம் மனுக்களை பெற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, வருவாய்த்துறை மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கையை, ஜமாபந்தி மனுவாக சமர்ப்பித்து தீர்வு பெறலாம். பொதுமக்கள், gdp.tn.gov.in/jamabandi என்ற இணையதள முகவரியில் சென்று, தங்களது மனுக்களை பதிவு செய்யலாம்.தங்கள் மொபைல் எண் மற்றும் குறியீட்டு எண்ணை பதிவு செய்ததும், ஜமாபந்தி விண்ணப்ப பகுதி கிடைக்கும். அதில், மாவட்டம், தாலுகா, கிராமம், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய துறை, கோரிக்கை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.பிறகு, அதற்கான ஆதார ஆவணங்களை, போட்டோ எடுத்து, பதிவேற்றம் செய்துகொள்ளலாம். மனுக்களை பதிவு செய்ததும், பதிவு செய்தவர் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படுகிறது.அதேபோல், மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படும் போதும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல்அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல், சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்படும்.எனவே, ஜமாபந்தியில் கொடுக்க வேண்டிய மனுக்களையும், விண்ணப்பங்களையும், 'ஆன்லைன்' மூலமாக அடுத்த மாதம், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X