சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகார்: சிவசங்கர் பாபா பள்ளி நிர்வாகிகளிடம் ஆணையம் விசாரணை

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:மாணவியருக்கு பாலியல்தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள, சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனில் ஆஜராகினர். செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது. இங்கு விடுதி உள்பட ஏராளமான வசதிகள் உள்ளன. இப்பள்ளியை, தன்னை ஆன்மிக குரு என்று அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா நடத்தி

சென்னை:மாணவியருக்கு பாலியல்தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள, சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனில் ஆஜராகினர். செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது. இங்கு விடுதி உள்பட ஏராளமான வசதிகள் உள்ளன. இப்பள்ளியை, தன்னை ஆன்மிக குரு என்று அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.

இவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, சுஷில் ஹரி பள்ளி மாணவியர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனில் புகார் அளித்தனர். இக்கமிஷன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேருக்கு 'சம்மன்' அனுப்பி இருந்தது. பள்ளி தாளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட மூன்று பேர், நேற்று ஆஜராகினர்.

அவர்களிடம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் சரண்யா ஜெயகுமார் உள்ளிட்டோர் விசாரித்தனர்.குடும்ப பிரச்னை தொடர்பாக, தன்னை சந்திக்க வரும் மாணவியர் மற்றும் கணவரை பிரிந்து வசிக்கும் பெண்களின் குழந்தைகள், வசதி குறைவான குடும்பத்தைச்சேர்ந்த குழந்தைகள் என குறி வைத்து, சிவசங்கர் பாபா பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதனால், விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும் என, சிவசங்கர் பாபாவுக்கு கமிஷன் மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஆஜராக தவறினால் கைது நடவடிக்கை இருக்கும் என, கமிஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X