பொது செய்தி

தமிழ்நாடு

'குப்பை' அல்ல, இந்த பிரச்னை: தீர்வு காண மக்கள் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
பொங்கலுார்:பொங்கலுார் ஊராட்சி ஐயப்பா நகர் அருகே பி.ஏ.பி., வாய்க்கால் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.'குப்பைகள் தேங்கினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் ஆபத்து ஏற்படும். எனவே, குப்பைகளை கொட்டாதீர்கள். சுத்தமாக பராமரிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

பொங்கலுார்:பொங்கலுார் ஊராட்சி ஐயப்பா நகர் அருகே பி.ஏ.பி., வாய்க்கால் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.'குப்பைகள் தேங்கினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் ஆபத்து ஏற்படும். எனவே, குப்பைகளை கொட்டாதீர்கள். சுத்தமாக பராமரிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று ஊராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் குப்பைகள் மேலும் குவிந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுமக்கள் கூறுகையில், 'துாய்மை பணியாளர்கள் வீடுதோறும் குப்பை வாங்கினால் குப்பை கொட்டுவது நின்றுவிடும். இதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X