டோக்கன் எங்கே? ரேஷன் கடையில் மக்கள் விழிப்புணர்வின்றி அசட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டோக்கன் எங்கே? ரேஷன் கடையில் மக்கள் விழிப்புணர்வின்றி 'அசட்டை'

Added : ஜூன் 12, 2021
Share
திருப்பூர்:ரேஷன் கடைகளில் டோக்கன் பெற திரண்ட கூட்டத்தை, 'வீட்டுக்கே வந்து தர்றோம்' என கூறி, ஊழியர்கள் கலைத்தனர்.புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தது. இரண்டாவது தவணை தொகை, மலிவு விலை மளிகை தொகுப்பும் வழங்கும் திட்டம் கடந்த 3ம் தேதி துவங்கப்பட்டது. அனைத்து ரேஷன் கடைகளிலும் இது வரும் 15ம் தேதி
 டோக்கன் எங்கே? ரேஷன் கடையில் மக்கள் விழிப்புணர்வின்றி 'அசட்டை'

திருப்பூர்:ரேஷன் கடைகளில் டோக்கன் பெற திரண்ட கூட்டத்தை, 'வீட்டுக்கே வந்து தர்றோம்' என கூறி, ஊழியர்கள் கலைத்தனர்.புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தது. இரண்டாவது தவணை தொகை, மலிவு விலை மளிகை தொகுப்பும் வழங்கும் திட்டம் கடந்த 3ம் தேதி துவங்கப்பட்டது. அனைத்து ரேஷன் கடைகளிலும் இது வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
இதற்கான டோக்கன் நேற்று முதல் பகுதிவாரியாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நேற்று காலை பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் டோக்கன் பெற ரேஷன் கடைகளுக்கு படையெடுத்தனர்.திருப்பூர், தண்ணீர் பந்தலில் உள்ள 'வளர்மதி' ரேஷன் கடையில் காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்கத் துவங்கினர்.ஒரு சிலர் நிற்கத்துவங்கியதும் மேலும் கூட்டம் கூடியது. கடை திறக்க வந்த ஊழியர், 'டோக்கன் நேரடியாக வந்து வழங்கப்படும்' எனத் தெரிவித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X