100 கோடி 'டோஸ்' தடுப்பூசி ஜி - 7 தலைவர்கள் உறுதி

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கார்பிஸ் பே :பிரிட்டனில் 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், உலக நாடுகளுக்கு 100 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்தை நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.பிரிட்டனில், கார்பிஸ் பே நகரில், ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று துவங்கியது.இதில் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஏழு வளர்ந்த நாடுகளின் தலைவர்கள்
 100 கோடி 'டோஸ்' தடுப்பூசி  ஜி - 7 தலைவர்கள் உறுதி

கார்பிஸ் பே :பிரிட்டனில் 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், உலக நாடுகளுக்கு 100 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்தை நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

பிரிட்டனில், கார்பிஸ் பே நகரில், ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று துவங்கியது.இதில் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஏழு வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து 'கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வோம்' என்ற கருத்தரங்கு நடந்தது. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:நட்பு நாடுகளின் துணையுடன் கொரோனா பாதிப்பில் இருந்து இந்த உலகை காப்பாற்றுவோம். ஏற்கனவே எட்டு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை, உலக சுகாதார நிறுவனத்தின் 'கோவாக்ஸ்' திட்டத்திற்கு வழங்குவதாக அறிவித்து உள்ளோம்.இது தவிர 50 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்தை உலக நாடுகளுக்கு அமெரிக்கா இலவசமாக வழங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டிற்கு தலைமை ஏற்றுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது, ''உலக நாடுகளுக்கு 10 கோடி டோஸ் தடுப்பூசியை பிரிட்டன் வழங்கும். அதில் 50 லட்சம் டோஸ் தடுப்பூசி, வரும் வாரங்களில் விநியோகிக்கப்படும்,'' என்றார்.மாநாட்டில் பங்கேற்ற இதர நாடுகளின் தலைவர்களும், தடுப்பூசி மருந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.
இதன்படி, ஜி - 7 கூட்டமைப்பு சார்பில் குறைந்தபட்சம் 100 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து, ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
12-ஜூன்-202110:13:32 IST Report Abuse
vbs manian அளவுக்கு மீறி வாங்கி பதுக்கி வைத்து விட்டு அவை வீணாகி விடும் நிலையில் தானம் கொடுக்க முன் வருகிறார்கள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-ஜூன்-202107:16:41 IST Report Abuse
blocked user அடிப்படை கூட்டல்க்கணக்குக்கூட தெரியாத தமிழக அமைச்சர்களுக்கு இவர்கள் உதவ முன்வந்தால் தமிழகத்தில் எல்லோருக்கும் தடுப்பூசி போட வசதியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X