சோளிங்கர் மலைக்கு செல்ல இந்தாண்டு இறுதிக்குள் ரோப் கார்| Dinamalar

''சோளிங்கர் மலைக்கு செல்ல இந்தாண்டு இறுதிக்குள் 'ரோப் கார்'

Added : ஜூன் 12, 2021 | |
சோளிங்கர்:''சோளிங்கர் மலைக்கு செல்ல இந்தாண்டு இறுதிக்குள் 'ரோப் கார்' பயன்பாட்டிற்கு வரும்'' என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.அவர் அளித்த பேட்டி:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 108 வைணவ தலங்களில் ஒன்றான யோக நரசிம்மர் மலை கோவிலுக்கு 1,305 படிகளில் ஏறி தான் பக்தர்கள் சென்றனர்.அவர்கள் வசதிக்காக 2006ம் ஆண்டு 9 கோடி ரூபாய் மதிப்பில், ரோப் கார் அமைக்கும்

சோளிங்கர்:''சோளிங்கர் மலைக்கு செல்ல இந்தாண்டு இறுதிக்குள் 'ரோப் கார்' பயன்பாட்டிற்கு வரும்'' என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அவர் அளித்த பேட்டி:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 108 வைணவ தலங்களில் ஒன்றான யோக நரசிம்மர் மலை கோவிலுக்கு 1,305 படிகளில் ஏறி தான் பக்தர்கள் சென்றனர்.அவர்கள் வசதிக்காக 2006ம் ஆண்டு 9 கோடி ரூபாய் மதிப்பில், ரோப் கார் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

இந்தாண்டு இறுதிக்குள் ரோப் கார் பயன்பாட்டிற்கு வரும்.தொல்லியல், ஹிந்து அறநிலையத் துறை மூலம் 12 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு செய்யாமல் உள்ள கோவில்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்ததும் கும்பாபிஷேகம் குறித்து அறிவிக்கப்படும். அறநிலைய துறைக்கு சொந்தமான இடங்களை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X