தமிழ்நாடு

அரசின் கனிவான கவனத்துக்கு! 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் ரயிலில்வந்து இறங்குகிறது கொரோனா!

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில் கொரோனா மருத்துவ உதவி மையம் அமைத்துகண்காணிக்காததுடன்,நோய்தடுப்பு நடவடிக்கைகளும்தீவிரப்படுத்தப்படாததால், வெளியூர் பயணிகள் மூலம், 'கொரோனா' பரவும் அபாயம் உள்ளது.கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும் கடந்து செல்லும், 78 ரயில்களில், 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணித்து வந்தனர்.தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாகநாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கேரளா
 அரசின் கனிவான கவனத்துக்கு! 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் ரயிலில்வந்து இறங்குகிறது கொரோனா!

கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில் கொரோனா மருத்துவ உதவி மையம் அமைத்துகண்காணிக்காததுடன்,நோய்தடுப்பு நடவடிக்கைகளும்தீவிரப்படுத்தப்படாததால், வெளியூர் பயணிகள் மூலம், 'கொரோனா' பரவும் அபாயம் உள்ளது.கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும் கடந்து செல்லும், 78 ரயில்களில், 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணித்து வந்தனர்.
தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாகநாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கேரளா எக்ஸ்பிரஸ் என, 15க்கும் குறைவான சிறப்பு ரயில்களில், நுாற்றுக்கணக்கான பயணிகள் தினமும், இங்கு வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை சமயத்தில், கொரோனா தொற்றுக்கான மருத்துவ உதவி மையம் இங்கு நிறுவப்பட்டது. தனியார் மருத்துவமனையுடன், ரயில்வே நிர்வாகமும் இணைந்து அறிகுறியுள்ள பயணிகளைபரிசோதனை செய்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.தற்போது, இரண்டாவது அலை தாக்கியுள்ள நிலையில், கொரோனா மருத்துவ உதவி மையம் இங்கு நிறுவப்படவில்லை. பயணிகளை, முறையாக கண்காணித்து பரிசோதனையும் செய்யப்படுவதில்லை.இரு நாட்களுக்கு முன்பு, ரயில்பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூட, ஆட்கள் இல்லாத நிலையில், அருகே செல்லவும் பலர் தயங்கினர். சிறிது நேரம் கழித்து, ஈர நெஞ்சம் கொண்டசிலர், அவரைஅரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மாநில அரசானது உள்ளூரில் நோயை கட்டுப்படுத்தினாலும், ரயில்களில் வந்திறங்கும் கொரோனா பயணிகளை தடுக்காத பட்சத்தில், தடுப்பு நடவடிக்கைகள் விரயம்தான்.கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் ராகேஷ் குமாரிடம் கேட்டபோது, ''பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், ரயில்வே டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மருத்துவ உதவி மையம் அமைப்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X