சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசிகள் தாரை வார்ப்பு மருந்தாளுனர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், 800 தடுப்பூசி மருந்து, பனியன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விவகாரத்தில் மருந்தாளுனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருப்பூரில் உள்ள ஐந்து நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 800 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்து, மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன், மூன்று பனியன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது குறித்து சுகாதார

திருப்பூர்:திருப்பூரில், 800 தடுப்பூசி மருந்து, பனியன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விவகாரத்தில் மருந்தாளுனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருப்பூரில் உள்ள ஐந்து நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 800 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்து, மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன், மூன்று பனியன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமாரிடம் கேட்டபோது, ''மருந்தாளுனர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது; விரைவில், அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் வாயிலாக தான், தனியார் பனியன் நிறுவனங்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அப்படி இருந்தும், அதிகாரிகள் தரப்பு இவ்விவகாரத்தில் தப்பித்து, நகர்ப்புற சுகாதார நிலைய பணியாளர், 'பலிகடா' ஆக்கப்பட்டுள்ளதாக, சுகாதார நிலைய ஊழியர்கள் குமுறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X