பொது செய்தி

தமிழ்நாடு

மோடி கிட் வினியோகம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
பா.ஜ., மாநில துணைதலைவராக இருக்கும் அண்ணாமலை பெயரில் துவங்கப்பட்டுள்ள,அண்ணாமலை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மளிகை பொருட்கள் அடங்கிய மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி, ராமகிருஷ்ணாபுரம் பொன்னைய்யராஜபுரம் சந்திப்பில் நடந்தது. இதில் அண்ணாமலை பங்கேற்று, ஐநுாறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, மோடி கிட் வழங்கினார். உடன் கட்சி

பா.ஜ., மாநில துணைதலைவராக இருக்கும் அண்ணாமலை பெயரில் துவங்கப்பட்டுள்ள,அண்ணாமலை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மளிகை பொருட்கள் அடங்கிய மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி, ராமகிருஷ்ணாபுரம் பொன்னைய்யராஜபுரம் சந்திப்பில் நடந்தது. இதில் அண்ணாமலை பங்கேற்று, ஐநுாறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, மோடி கிட் வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.உதவித்தொகை வேண்டும்கோவை மாநகர் மாவட்டம் சவரத் தொழிலாளர் சங்க தலைவர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடை மற்றும் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். தமிழக அரசு கருணை அடிப்படையில், எங்களுக்கு முடிதிருத்தும் நலவாரிய உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத சவரத்தொழிலாளர்களுக்கு, 4000 ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும்' என கூறியுள்ளார்.ஆர்ப்பாட்டம்பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆட்டோவை, கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி தலைவர் ராஜா உசேன் உள்பட பலர் பங்கேற்றனர்.உதவி மையம் வேண்டும்கோவையில் கொரோனா பீதியால், உள்ளூரில் இருக்கவும் முடியாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளில் உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என்று, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கெங்குவாரிடம், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.யூகலிப்டஸ் 'குளோன்' கருத்தரங்கம்இந்திய வன மரபியல் நிறுவனம் சார்பில், யூகலிப்டஸ் குளோன்களை பிரபலமாக்குவது குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நேற்று நடந்தது. விவசாயிகள், மரம் வளர்ப்போருடன், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகள் கலந்துரையாடினர். டேராடூன் வன ஆராய்ச்சி மைய துணை தலைவர் சர்மா, வன மரபியல் நிறுவன இயக்குனர் குன்னிகண்ணன், யூகலிப்டஸ் மேம்பாட்டு திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், டி.என்.பி.எல்., பொது மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X