பொது செய்தி

தமிழ்நாடு

கலிபோர்னியா டை பல்கலை நடத்திய போட்டி: கோவை மாணவர்கள் ஜே ஜே!

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:சர்வதேச அளவில் நடந்த தொழில்முனைவோருக்கான புதிய கண்டுபிடிப்பு போட்டியில், கோவை கல்லுாரி மாணவர் குழு,சிறப்பு பரிசை வென்று அசத்தியுள்ளனர்.அமெரிக்கா கலிபோர்னியாவிலுள்ள டை பல்கலை சார்பில், நடந்த இப்போட்டியில், ஏழு நாடுகளை சேர்ந்த பல்கலை, கல்லுாரிகளில் இருந்து, 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.பல்வேறு சுற்றுகளை கடந்து, 27 அணிகள் பங்கேற்ற இறுதிபோட்டியில்,

கோவை:சர்வதேச அளவில் நடந்த தொழில்முனைவோருக்கான புதிய கண்டுபிடிப்பு போட்டியில், கோவை கல்லுாரி மாணவர் குழு,சிறப்பு பரிசை வென்று அசத்தியுள்ளனர்.அமெரிக்கா கலிபோர்னியாவிலுள்ள டை பல்கலை சார்பில், நடந்த இப்போட்டியில், ஏழு நாடுகளை சேர்ந்த பல்கலை, கல்லுாரிகளில் இருந்து, 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.பல்வேறு சுற்றுகளை கடந்து, 27 அணிகள் பங்கேற்ற இறுதிபோட்டியில், கோவை கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் கட்டடவியல் துறையை சார்ந்த பயனியர் குழு தகுதிபெற்றது.கல்லுாரி கட்டடவியல் துறை பேராசிரியர் மீனாட்சி வழிகாட்டுதலின் படி, இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குழு இணைந்து, பள்ளி மாணவர்களின் சுகாதார மேம்பாட்டுக்கு உதவும், உயிர் தொழில்நுட்பத்தில் செயல்படும் நடமாடும் கழிப்பறை, சமூக தாக்கத்துக்கான சிறப்பு பரிசை தட்டிச்சென்றது.மாணவர்கள் ரூ.9.76 லட்சம் மதிப்பில் ரொக்கம் மற்றும் தொழில் துவங்குவதற்கான பொருட்களாகவும் பரிசாக பெற்றனர். ஹரி பாலன், கோகுல், ஹரிஷ் நடராஜ், பஹீம் அகமது, மற்றும் திவ்யபாரதி ஆகிய மாணவர்கள் அடங்கிய இக்குழுவை, கே.பி.ஆர்., குழுமங்களின் தலைவர் ராமசாமி, கல்லுாரி முதன்மை செயலர் நடராஜன், முதல்வர் அகிலா, துறைத்தலைவர் அனுஷா ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X