இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு இ.ம.க.,வெரிகுட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு இ.ம.க.,'வெரிகுட்'

Added : ஜூன் 12, 2021
Share
கோவை:இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின், அதிரடி நடவடிக்கைகளை இந்துமக்கள் கட்சி பாராட்டியுள்ளது.இது குறித்து, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில்குமார் கூறியுள்ளதாவது:சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டதை போல், தமிழகம் முழுக்க கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும்.அதோடு, கோவிலில் உள்ள கட்டண வழிபாட்டு

கோவை:இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின், அதிரடி நடவடிக்கைகளை இந்துமக்கள் கட்சி பாராட்டியுள்ளது.இது குறித்து, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில்குமார் கூறியுள்ளதாவது:சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டதை போல், தமிழகம் முழுக்க கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும்.அதோடு, கோவிலில் உள்ள கட்டண வழிபாட்டு முறையை ஒழிப்பதோடு, மொட்டையடிப்பதற்கு, வாகன பார்க்கிங், காலணி பாதுகாப்பு, தேங்காய் உடைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும். கோவில் நிலத்துக்கு, தற்போதைய சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு, செந்தில்குமார் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X