பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை: ஐ.ஏ.எஸ்., அதிகாரி காயத்ரி உறுதி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை;கொரோனா நோயாளிகள் இனி சிகிச்சைக்காக மருத்துவமனைகளில், காத்திருக்க வேண்டிய தேவையில்லை என்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரி காயத்ரி தெரிவித்தார்.கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரவும், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அரசு சார்பில், சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நோய் கட்டுப்பாடு குறித்து, ஐ.ஏ.எஸ்.,அதிகாரி காயத்ரி

கோவை;கொரோனா நோயாளிகள் இனி சிகிச்சைக்காக மருத்துவமனைகளில், காத்திருக்க வேண்டிய தேவையில்லை என்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரி காயத்ரி தெரிவித்தார்.கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரவும், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அரசு சார்பில், சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நோய் கட்டுப்பாடு குறித்து, ஐ.ஏ.எஸ்.,அதிகாரி காயத்ரி கூறியதாவது:கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கொடிசியா, அரசு கலைக்கல்லுாரி கொரோனா சிகிச்சை மையம் என, ஒவ்வொரு இடங்களிலும், ஆய்வு செய்து வருகிறேன்.முன்னறிவிப்பு இல்லாமல், திடீர் 'விசிட்' அடிக்கும்போதுதான், உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. கோவை அரசு மருத்துவமனையில், டாக்டர்கள், நர்ஸ்கள், சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா, முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தோம்.இதில் சிறு மாற்றமாக, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை, தலைமை டாக்டர் ஒருவர், இப்பணிகளை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இ.எஸ்.ஐ.,மருத்துவமனை வளாகத்தில், குப்பை கழிவு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்காக ஆர்.ஓ.,குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.'ஜீரோ டிலே வார்டு' கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், அவசர சிகிச்சை தேவைக்காக வரும் நோயாளிகளை, காத்திருக்க வைக்காமல் உடனே சிகிச்சை அளிக்கப்படும். இனி, ஆம்புலன்ஸ்களில் எந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக காத்திருப்பதை பார்க்க முடியாது.உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இரவு நேரங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும், உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X