பொது செய்தி

தமிழ்நாடு

3வது அலையை துவக்க கொடியேற்றுகிறாரா!

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
போத்தனூர்:ஆத்துப்பாலம் அருகேயுள்ள என்.பி., இட்டேரியில், குறிச்சி வடக்கு பகுதி தி.மு.க., சார்பில், ஏழை, எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.எம்.எல்.ஏ., உதயநிதி, பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி நடக்குமிடத்தில் பொருட்களை பெறும் பயனாளிகள், சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர்.
 3வது அலையை துவக்க கொடியேற்றுகிறாரா!

போத்தனூர்:ஆத்துப்பாலம் அருகேயுள்ள என்.பி., இட்டேரியில், குறிச்சி வடக்கு பகுதி தி.மு.க., சார்பில், ஏழை, எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.எம்.எல்.ஏ., உதயநிதி, பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி நடக்குமிடத்தில் பொருட்களை பெறும் பயனாளிகள், சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், உதயநிதி வந்தவுடன் கட்சியினர் கும்பலாக அவரை சூழ்ந்தனர். கொடியேற்றும் போதும் முண்டியடித்தனர்.அதிர்ச்சியடைந்த உதயநிதி, அவசர, அவசரமாக கொடியை ஏற்றியதுடன், ஒரு சிலருக்கு மட்டும் உதவி பொருட்களை வழங்கி விட்டு, புறப்பட்டுச் சென்றார். தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், மாநிலத்திலேயே கோவைதான் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், உதவி செய்ய நினைப்போர் ஆடம்பரமின்றி, குறைந்த நபர்களுடன் வீடு, வீடாக சென்று வழங்கலாம். கொடியேற்றுவது போன்ற கட்சி நிகழ்ச்சிகளை தவிர்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X