பொது செய்தி

தமிழ்நாடு

உக்கடம் மார்க்கெட் பிரச்னை; கடைகளை மாற்ற உத்தரவு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட்டில், கூட்டம் கூடுவதை தடுக்க, தக்காளி, வெங்காயம், கீரை, தேங்காய் வியாபாரிகளுக்கு, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.கோவையில் காய்கறி மொத்த மார்க்கெட்டுகள், காலை, 3:00 முதல், 7:00 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும்; சில்லறை வியாபாரிகளுக்கு மட்டும் விற்க வேண்டுமென, மாநகராட்சி அறிவித்துள்ளது. சமூக இடைவெளி பின்பற்றால்,

கோவை:உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட்டில், கூட்டம் கூடுவதை தடுக்க, தக்காளி, வெங்காயம், கீரை, தேங்காய் வியாபாரிகளுக்கு, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.கோவையில் காய்கறி மொத்த மார்க்கெட்டுகள், காலை, 3:00 முதல், 7:00 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும்; சில்லறை வியாபாரிகளுக்கு மட்டும் விற்க வேண்டுமென, மாநகராட்சி அறிவித்துள்ளது. சமூக இடைவெளி பின்பற்றால், கூட்டம் கூட்டமாக வியாபாரிகள் நிற்கின்றனர். தொற்று மேலும் பலருக்கு பரவுவதற்கு வாய்ப்பாக, மார்க்கெட் அமைந்துள்ளது.இதுதொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து, மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்ரமணியன், உதவி கமிஷனர் (வருவாய்) அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தேங்காய், கீரை வகைகள் விற்போர், உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல வேண்டும். ஊட்டி காய்கறி விற்பவர்கள், மார்க்கெட் வளாகத்துக்குள் கடை நடத்தலாம். எக்காரணம் கொண்டும் சில்லறை வியாபாரம் செய்யக் கூடாது; வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். மீண்டும் கூட்டத்தை திரட்டினால், மார்க்கெட் மூடப்பட்டு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்படும் என, வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கடைகளை பிரித்து கொண்டு செல்ல, இரு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X