பொது செய்தி

தமிழ்நாடு

பைக்கில் நடமாடும் 'பஞ்சர்' கடை இன்ஜி., பட்டதாரி புது முயற்சி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திண்டிவனம்:திண்டிவனத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர், மொபைல் வாகனம் மூலம் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கு பஞ்சர் ஒட்டி வருகிறார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ரொட்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி, 58; பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது மகன் ஆறுமுகம், 25; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி.கொரோனா ஊரடங்கு காரணத்தால் வேலை கிடைக்காமல், தந்தைக்கு உதவியாக
 பைக்கில் நடமாடும் 'பஞ்சர்' கடை இன்ஜி., பட்டதாரி புது முயற்சி

திண்டிவனம்:திண்டிவனத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர், மொபைல் வாகனம் மூலம் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கு பஞ்சர் ஒட்டி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ரொட்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி, 58; பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது மகன் ஆறுமுகம், 25; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி.கொரோனா ஊரடங்கு காரணத்தால் வேலை கிடைக்காமல், தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.

சில தினங்களுக்கு முன், திண்டிவனம் அடுத்த ஒலக்கூரில் கர்ப்பிணியை அழைத்துச் சென்ற கார் பஞ்சராகி நின்றதால், அதை சரி செய்ய, ஆறுமுகம் நேரில் சென்றுள்ளார்.பஞ்சர் ஒட்டி, காரை சென்னைக்கு அனுப்புவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. அதன்பின், காரில் சென்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.காரின் ஓட்டுனர், ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு நன்றி கூறி, காலதாமதமாக சென்றதால், பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட ஆறுமுகத்திற்கு, நடுவழியில் கார், இரு சக்கர வாகனங்கள் பஞ்சராகி விட்டால், உடனடியாக சீர் செய்ய, நடமாடும் பஞ்சர் கடையை துவக்கும் எண்ணம் உருவானது.இதன் அடிப்படையில், ஆறுமுகம், தன் இரு சக்கர வாகனத்தில், 'ஏர் டேங்க், டூல்ஸ் பாக்ஸ், ஹைட்ராலிக் ஜாக்கி' உள்ளிட்டவைகளை பொருத்தி, நடமாடும் பஞ்சர் கடையைத் துவங்கி, நடத்தி வருகிறார்.

வாகனங்களில் செல்வோர் நடுவழியில் பஞ்சராகி நின்றால், தன்னை தொடர்பு கொள்வதற்காக அவரது மொபைல் எண்களை, 'யுடியூப்' மூலம் கே.கே.டயர் என்ற பெயரில் பிரபலப்படுத்திஉள்ளார்.ஆறுமுகம் கூறுகையில், ''திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிப்பர். உடனே, அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பஞ்சர் ஒட்டி தருவேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X