பொது செய்தி

தமிழ்நாடு

கோவை டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் பேரூர், கருமத்தம்பட்டி, வால்பாறை, மேட்டுப்பாளையம், பெள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ஆறு சரகங்கள் உள்ளன. இந்த சரகங்களின் டி.எஸ்.பி.,க்களாக பணியாற்றி வந்த ஆறு பேரும், வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.பேரூர் டி.எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசலு, ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., யாகவும், பெரியநாயக்கன்பாளையம்

கோவை:கோவை மாவட்டத்தில் பேரூர், கருமத்தம்பட்டி, வால்பாறை, மேட்டுப்பாளையம், பெள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ஆறு சரகங்கள் உள்ளன. இந்த சரகங்களின் டி.எஸ்.பி.,க்களாக பணியாற்றி வந்த ஆறு பேரும், வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.பேரூர் டி.எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசலு, ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., யாகவும், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.,கிருஷ்ணமூர்த்தி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கும், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,சூரியமூர்த்தி தென்காசி மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன் திருநெல்வேலி மாநகர மனித உரிமை மீறல் பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். பொள்ளாச்சி டி.எஸ்.பி., சிவகுமார், சிவகங்கை மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர்களுக்கு பதிலாக, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த டி.எஸ்.பி.,க்கள், கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.இதன்படி, ஆனந்த் ஆரோக்கியராஜ் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாகவும், திருமால் பேரூர் சரக டி.எஸ்.பி.,யாகவும், ஜெய்சிங் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X